அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை.. குடும்ப பிரச்னை காரணமா?
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisment
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மிஸ்ரா. 45 வயதான இவர் விதிஷா நகர மண்டல துணைத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு நீலம் என்ற மனைவியும் 13 மற்றும் 7 வயதில் இரு மகன்களும் இருந்தனர். இந்த இருவரும் அரிய வகையான எலும்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை தீர்வல்ல
இதனால் மன வருத்தத்தில் இருந்த சஞ்சீவ் மிஸ்ரா, பேஸ்புக்கில் போஸ்ட் மூலம் தங்களின் நிலையை தெரிவித்துவிட்டு மாத்திரை சாப்பிட்டு, தனது குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் இவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் நால்வரும் உயிரிழந்தனர்.
Advertisment
Advertisements
மிஸ்ரா எழுதிய தற்கொலை குறிப்பில், “எங்கள் மகன்களை காப்பாற்ற யாரும் இல்லை. எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/