துணைவேந்தர் நியமனம், குடியரசுத் தலைவருக்கு டிலிட் விருது வழங்கி கவுரவித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கேரளாவின் சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் அரசாங்கத்துக்கும், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில், ஆளுர் ஆரிப் தற்போது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நிலவும் ஹிஜாப் பிரச்சினை குறித்து பேசத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து இன்னும் பெரியளவில் கருத்து வராத நிலையில், ஆரிப் கருத்து தேசிய தலைநகரில் உள்ள அதிகார வட்டங்களில் கவனிக்கப்படுகின்றன.
அவர் கூறியதாவது, முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று அழைப்பது வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதி. முத்தலாக் தடையால் வருத்தம் அடைந்தவர்கள் ஹிஜாப் போட்டு சர்ச்சையை உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்தார்.தற்போது, ஆரிப்-இன் கருத்தை மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், கட்சியில் ஆரிப் கானின் ரசிகர் மன்றம் அதிகரித்து வருகிறது என்றார்.
இட விவகாரம்
உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிய அரங்கம் திறக்கப்பட்டுள்ள நிலையில், முழு நீதிமன்ற அமர்வுக்கான இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக, இந்திய தலைமை நீதிபதி அமரும் நீதிமன்ற அறை 1ல், நீதிபதிகள் மேடையில் அமர்வதற்கு சிறிது நெரிசல் ஏற்பட்டாலும், முழு நீதிமன்றமும் நடத்தப்படுகிறது.
அண்மையில் மறைந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என் எம் கஸ்லிவால், பி பி சாவந்த், எஸ் எஸ் நிஜ்ஜார் ஆகியோரின் நினைவாக செவ்வாய்கிழமை முழு நீதிமன்றக் குறிப்பு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றுக்கொண்டனர்.
மேனேஜ்மென்ட் குரு மோடி
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை மேனேஜ்மென்ட் குரு என அழைத்தார்.
FICCI பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உரையாடல் அமர்வில் உரையாற்றிய சிங், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
கோவிட்-19-ஆல் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ஆட்டம் கண்டபோது, தொற்றுநோயை நிர்வகிப்பதில் பிரதமர் மோடியை மேனேஜ்மென்ட் குருவாக உலகம் பார்த்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முஸ்லீம் பெண்களுக்கு 2012ல் புதிய தாவணி முறையை அறிமுகப்படுத்திய கேந்திரிய வித்யாலயா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.