Advertisment

2019 நாடாளுமன்ற தேர்தல் : பா.ஜ. கோடிட்ட பேஸ்புக் பக்கங்களின் எண்ணிக்கை திடீர் குறைப்பு

Facebook bjp nexus : 10 மில்லியன் பாலோயர்களை கொண்ட The Chaupal இணையதளத்தின் பேஸ்புக் பக்கம், 2018ம் ஆண்டுமுதல், அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
BJP, loksabha election, 2019 election, facebook, facebook pages, bjp facebook pages, facebook bjp nexus, facebook hate speech rules, pm modi, ankhi das, facebook and lok sabha elections, indian express news

Karishma Mehrotra

Advertisment

2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், பேஸ்புக்கின் சட்டவிதிகளை மீறுவதாக உள்ளதாக அக்கட்சி தரப்பில் 44 பேஸ்புக் பக்கங்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், குறிப்பிட்ட பக்கங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களே பதிவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி, பா.ஜ புகார் தெரிவித்த பட்டியலில் இருந்து 14 பக்கங்கள் மாயமாகியுள்ளன.

பீம் ஆர்மி, நையாண்டி இணையதளம் “We Hate BJP”, இது அதிகாரப்பூர்வமற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவுப்பக்கம் மற்றும் Alt News fact checks இணையதளங்களில் அதிகமுறை பகிரப்பட்ட செய்திகள் “The Truth of Gujarat” உள்ளிட்ட பக்கங்கள் மீது பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்திருந்தது. பத்திரிகையாளர்கள் ரவீஷ் குமார் மற்றும் வினோத் துவா உள்ளிட்டோரின் இணையதளங்களை முடக்கியதன் மூலம், இந்த பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், பேஸ்புக் இந்தியா நிறுவனத்திடம் பாரதிய ஜனதா கட்சி விடுத்த கோரிக்கையில், நீக்கப்பட்ட 17 பக்கங்களை மீண்டும் கொண்டு வாருங்கள் மற்றும் தகவல்களின் மூலம் நிதி திரட்டி வந்த The Chaupal and OpIndia இணையதளங்களை மீ்ண்டும் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.

அந்த 17 பக்கங்கள் தவறுதலாக அந்த பட்டியலில் இடம்பெற்றுவிட்டதாக பா.ஜ. கட்சியின் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

“The Chaupal” இணையதளத்தின் நிறுவனர் விகாஷ் பாண்டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மானிடைசேசன் நிகழ்வை பேஸ்புக் ஒழுங்குமுறைபடுத்தியதில் இருந்து தாங்கள் தகவல்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிகழ்வை மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

OpIndia இணையதளம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜ.,வின் வேண்டுகோளுக்கிணங்க பேஸ்புக்கில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்த 17 பக்கங்களில், போஸ்ட் கார்ட் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த செய்திகள் பெரும்பாலும் கன்னட மொழியிலேயே உள்ளன.

Postcard News இணையதள நிறுவனர் மகேஷ் வி ஹெக்டே, வகுப்புவாத பகையுணர்வை வளர்க்கும் விதமாகவும், போலீஸ் தொடர்பான போலி செய்திகளையும், மததுவேசம் குறித்த கருத்துகளை வெளியிடுவதாக கூறி, 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில், பெங்களூருவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பெங்களூரு போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு பா.ஜ, கட்சி தலைவர்களின் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பா.ஜ., எம்பி தேஜஸ்வி சூர்யாவுடன்,ஹெக்டே, நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பேஸ்புக் நிறுவனத்தால், Postcard News அதிகாரப்பூர்வ பக்கம் முடக்கப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு, ஹெக்டே, பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அமித் மால்வியா, பேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை பிரிவின் உயரதிகாரிகள் அங்கி தாஸ் மற்றும் ஷிவ்நாத் துக்ராலுக்கு அனுப்பிய இமெயிலின் காரணமாகவே, Postcard News முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க அங்கி தாஸ், துக்ரால் மறுத்துவிட்டனர்.

2019ம் ஆண்டின் பிப்ரவரியில், பேஸ்புக் இந்தியா அதிகாரிகளுடன் மால்வியா நடத்திய ஆலோசனையில், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக் பக்கங்களை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு மால்வியா அளித்த பேட்டியில், துக்ரால் இதுதொடர்பாக வழங்கிய ஆலோசனையின்படியே முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பா.ஜ, தவறாக திட்டமிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மால்வியா மேலும் கூறியதாவது, I Support Narendra Modi உள்ளிட்ட பக்கங்கள், பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான தொண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பக்கங்களும் முடக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, பேஸ்புக் நிறுவனத்திடம் பேசினேன். பேஸ்புக் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் நிறுவனம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, யாரையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை. அவர்கள் வெளியிடும் தகவல்களை உண்மையா என்று பரிசோதித்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தேவைப்பட்டால் மீண்டும் அதனை சோதனைக்குட்படுத்தி மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதே, எங்களின் கொள்கை ஆகும்.

2019 தேர்தல் நேரத்தில் தலைவர் பிரசாரத்தில் பேசிய கருத்துகள், பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டன. அதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக நாங்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டது மட்டுமல்லாது சர்வதேச நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அந்த கருத்துகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு உண்மையான தகவலை தெரிவித்து வந்தோம். ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் எங்களின் தனித்தன்மை கெட்டுவிடும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

மால்வியா, பேஸ்புக் நிறுவனத்திற்கு விடுத்த கோரிக்கையில், பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் பக்கங்கள் உள்ளிட்ட 8 பக்கங்களை பாதுகாக்குமாறு தெரிவித்திருந்தார். அதில் The Chaupal” and “PMO India: Report Card”.உள்ளிட்ட பக்கங்களும் இருந்தன.

பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பிலான 4 பக்கங்களில்,அக்கட்சிக்கு ஆதரவான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகவும், இது பேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை பிரிவு இயக்குன் அங்கி தாஸ் ஆதரவிலேயே நடைபெற்றுள்ளதாக, வால்ட் ஸ்டீரிட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 மில்லியன் பாலோயர்களை கொண்ட The Chaupal இணையதளத்தின் பேஸ்புக் பக்கம், 2018ம் ஆண்டுமுதல், அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளது.

10 மில்லியன் பாலோயர்களை கொண்ட OpIndia இணையதளத்தின் பேஸ்புக் பக்கம், 2019, மார்ச் முதல் ஜூன் வரை, அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்துள்ளது.

2 மில்லியன் பாலோயர்களை கொண்ட “PMO India: Report Card” பக்கங்கள், ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Before 2019 polls, BJP flagged 44 ‘rival’ pages, 14 now off Facebook

Bjp Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment