கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ சனகவுடா பாட்டீல் எத்னால் கூறிய நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்திட கர்நாடாக காங்கிரஸ் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து முதல்வர் பசவராஜ் பொம்பை மறுப்பு தெரிவித்துவிட்டார்.
கர்நாடக அமைச்சரவையில் மறுசீரமைப்பு குறித்த தகவல் பரவிய நிலையில், எம்எல்ஏ இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது, அரசியல் களத்தில் பல திருடர்களை சந்திப்பீர்கள். சிலர் டெல்லி சென்று சோனியா, நட்டாவை சந்திக்கவைக்கிறோம் என்றும் கூறுவர். அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டெல்லியில் இருந்து சிலர் என்னிடம் வந்து, 'உங்களை முதல்வராக்குகிறோம். 2,500 கோடி ரூபாய் கொடுங்கள் என்றனர். எனக்கோ 2,500 கோடி என்றால் எவ்வளவு பணம்… இந்தப் பணத்தை எங்கே வைத்திருப்பார்கள் என்றே சிந்திக்கிறேன். அறையில் வைப்பதா அல்லது கிடங்கில் வைப்பதா என்று கேட்டேன். அவர்கள் என்னை ஜெபி நட்டாவிடமும், அமித் ஷாவின் வீட்டிற்கும் அழைத்து செல்வதாக கூறினார்கள் என்றார்.
இது தொடர்பான கேள்விகளுக்கு பொம்மை பதிலளிக்க மறுத்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் தேசிய அளவிலான விவாதம் மற்றும் விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, கர்நாடகாவில் தற்போதைய பாஜக அரசால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவிப் பேராசிரியர்கள் பதவிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊழல் புகார்கள் அதிகமாகியுள்ளது. எம்எல்ஏவாக உள்ள யத்னாலுக்கு, எதிர்காலத்தில் நல்ல இலாகா கிடைக்கும் என தெரிகறது. அவரது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil