Advertisment

இஸ்லாமியரையும், பிராமணரையும் படுக்கையில் இணைத்து ஆபாசப்படுத்துவதா? - பிக்பாஸுக்கு தடை கோரும் பாஜக எம்.எல்.ஏ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bjp mla penned letter to javadekar wants bigg boss banned for spreading vulgarity - 'இஸ்லாமியர்களும், பிராமணர்களும் படுக்கையை பகிர்கின்றனர்' - பிக்பாஸுக்கு தடை கோரும் பாஜக எம்.எல்.ஏ

bjp mla penned letter to javadekar wants bigg boss banned for spreading vulgarity - 'இஸ்லாமியர்களும், பிராமணர்களும் படுக்கையை பகிர்கின்றனர்' - பிக்பாஸுக்கு தடை கோரும் பாஜக எம்.எல்.ஏ

பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சி கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, அதற்கு தடை கேட்டு உ.பி. பாஜக எம்எல்ஏ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சி நமக்கு தான் புதிது. ஆனால், ஹிந்தியில் பல வருடங்களாக பல சீசன்கள் அரங்கேறியுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் ஹிந்தியின் 13 வது சீசனை வழக்கம் போல் சல்மான் கான் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், வீட்டில் குழந்தைகள் பார்க்க முடியாத வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டுமென பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் மீது புகார்

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவினால் மிகப்பெரிய கலாச்சார கேடு விளைவிப்பதாக கூறிவருகிறார். இதற்கு தடை கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

10, 2019

"இந்த நிகழ்ச்சி ஆபாசமான மற்றும் மோசமான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளது. குடும்பத்தினர் வீட்டில் அமர்ந்து பார்க்க தகுதியற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. நாட்டின் கலாச்சார நெறிமுறைகளுக்கு எதிராகவும் மிகவும் ஆட்சேபனைக்குரிய நெருக்கமான படுக்கைக்காட்சிகள் கொண்டுள்ளது. இதில் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் படுக்கையை ஷேர் செய்வது போல் காட்டுகின்றனர். இஸ்லாமியர்களையும், பிராமணர்களையும் ஒரே படுக்கையை பகிர்வது போல காட்டுகின்றனர். குடும்பத்தினரோடு அமர்ந்து பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

குழந்தைகளும் சிறார்களும் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள், ஆனால் இந்நிகழ்ச்சி வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் இணையத்திலும் கிடைக்கின்றன.

ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது இழந்த பெருமையை மீண்டும் பெற முயற்சிக்கிறார், மறுபுறம், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கத்திற்கான தணிக்கை பொறிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும். நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss Salman Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment