கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளது.
அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், “முன்மாதிரியான தண்டனை நடவடிக்கை” எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது என காங்கிரஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடும் தேர்தலில் பரிதாபமாக தோல்வியடைவார் என்று பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பா கூறினார்.
வருணா சட்டமன்ற தொகுதி சித்தராமையாவின் குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. இது காங்கிரஸுக்கு தொடர்ந்து மூன்று வெற்றிகளை உறுதி செய்துள்ளது.
இந்தத் தொகுதியில் லிங்காயத் சமூகத்தைச் சோமன்னாவை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதற்கிடையில், பாஜக 130 முதல் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் எடியூரப்பா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“