பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை (அக்.15) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழிலதிபரிடம் "லஞ்சம்" பெற்றதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க "விசாரணைக் குழுவை" அமைக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார்.
இதற்கு, பதிலளித்த மொய்த்ரா, “லோக்சபா சபாநாயகர் துபே மீதான நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளை கையாண்ட பிறகு தனக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் வரவேற்கிறேன்” என்றார்.
இந்த இரண்டு எம்.பி.க்களும் தங்கள் அனல் பறக்கும் பாராளுமன்ற உரைகள் மற்றும் எதிரிகள் மீது போர்க்குணமிக்க தாக்குதல்களுக்கு பெயர் பெற்றவர்கள், பல ஆண்டுகளாக பல பிரச்சனைகளில் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் துபே, பணம் பெற்று கேள்வியெழுப்பி கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : BJP MP alleges Mahua Moitra took ‘bribes’ to ask questions in Parliament, TMC leader hits back
மேலும் அதில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் இடையே லஞ்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான "மறுக்க முடியாத" ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ட்விட்டர் எக்ஸில் பதலளித்துள்ள மொய்த்ரா சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து, “தவறான பிரமாணப் பத்திரங்கள் தொடர்பாக அவருக்கு எதிரான விசாரணைகளை முடித்துவிட்டு எனது விசாரணைக் குழுவை அமைக்கவும்” எனத் தெரிவித்திருந்தார்.
துபேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு "விசாரணைக் குழுவை" அமைக்குமாறும் அவர் வலியுறுத்தினார். மேலும், மொய்த்ரா துபேயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அதானி மீதும் தாக்குதல் நடத்தினார்.
தொடர்ந்து, மற்றொரு பதிவில், மொய்த்ரா, “அதானியின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை, விலைப்பட்டியல், பினாமி கணக்குகள் ஆகியவற்றை விசாரித்து முடித்த உடனேயே, நான் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“