மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, அக்கட்சி எம்.பி.க்கள் பாராட்டுவது புதிதல்ல. ஆனால், திங்கட்கிழமை நிதின் கட்கரிக்கு புதிய பெயர் ஒன்று மக்களவையில் கிடைத்தது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தபீர் காவ் கூறுகையில், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிலந்தி வலை பின்னுவது போல சாலைகளை அமைத்ததற்காக அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஸ்பைடர்மேன் என பெயரிட்டுள்ளேன் என்றார். இந்த பாராட்டை கூறும் போது, கட்கரி அவையில் இல்லை.
எம்.பிக்களின் ஒற்றுமை
திங்களன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஆளும் கட்சியும், எதிர்கட்சி எம்.பிக்களும் மாறிமாறி குரல் கொடுக்காமல், பிரச்சினைக்கு ஒரே மாதிரியாக குரல் கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேந்திரிய வித்யாலயா பிரச்னை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி வசதி பிரச்சினை, வளர்ச்சிப் பணிகளில் எம்.பி.,க்களை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் தயக்கம் ஏன் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒரே மாதிரி குரல் எழுப்பினர்.
கல்விக் கொள்கைகளை உருவாக்கும் போது மாற்றுத்திறனாளி மாணவர்களை முக்கிய பங்குதாரராக சேர்க்குமாறு இரு தரப்பு எம்.பி.க்களும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தினர்,
காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு வசதிகள் குறித்த கேள்வியை எழுப்பியதற்காக பாஜக எம்.பி அபராஜிதா சாரங்கியைப் பாராட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil