சமீபத்தில் மாண்டி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பாலிவுட் நடிகையும் பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத், மொஹாலி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியில் சோதனை செய்த பிறகு, சி.ஐ.எஸ்.எஃப் பெண் போலீசாரால் அறையப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, விவசாயிகளின் போராட்டத்தின் போது பஞ்சாப் பெண்களுக்கு எதிராக கங்கனா ரனாவத் தவறான கருத்துக்களை தெரிவித்ததாக கான்ஸ்டபிள் கூறினார்.
இந்த சம்பம் குறித்து கங்கனா ரனாவத் உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை கங்கனா ரனாவத், பாதுகாப்பு சோதனையின் போது சி.ஐ.எஸ்.எஃப் ஊழியர்களால் "துஷ்பிரயோகம் செய்யப்பட்டு முகத்தில் அடிக்கப்பட்ட்தாகக் கூறினார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. முதலில், நான் பாதுகாப்பாக இருக்கிறேன், நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் இன்று பாதுகாப்பு சோதனையின் போது இந்த சம்பவம் நடந்தது. பாதுகாப்புச் சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த பெண், ஒரு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் பணியாளர் பக்கத்தில் இருந்து வந்து, என் முகத்தில் அடித்து, என்னைத் தவறாகப் பேசத் தொடங்கினார். ஏன் அப்படி செய்தீர்கள் என்று நான் கேட்டதற்கு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறினார். நான் பாதுகாப்பாக இருக்கிறேன், ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் கடும்போக்குவாதம் மற்றும் தீவிரவாதம் குறித்து நான் கவலைப்படுகிறேன்.” என்று கூறினார்.
இதற்கிடையில், ஏர்போர்ட் டி.எஸ்.பி குல்ஜிந்தர் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், தங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும், இந்த விவகாரம் தற்போது சி.ஐ.எஸ்.எஃப் ஆல் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. யாருக்கும் தீங்கு செய்ய யாருக்கும் உரிமை இல்லை. கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரணாவத் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். உண்மையில், தேசிய தலைநகரில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாலையில் டெல்லிக்கு விமானம் மூலம் சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்கிறேன்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“