/tamil-ie/media/media_files/uploads/2021/10/Untitled-design-2021-10-21T085546.444.jpg)
இந்திய ஜனநாயகம், நிர்வாகம் மற்றும் அதன் சாதக பாதகங்கள் குறித்து தெரிந்து கொள்ள இந்தியா வருமாறு 75 நாடுகளை சேர்ந்த இளம் அரசியல் தலைவர்களுக்கு கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் தலைவரும் பாஜக மூத்த எம்பியுமான வினய் சஹஸ்ரபுத்தே அழைப்பு விடுத்துள்ளார்
35 வயதிற்குட்பட்ட அரசியல்வாதிகள் வெவ்வெறு குழுக்களில் இடம்பெற வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு கண்டங்களை சேர்ந்த 5 நாட்டின் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவின் முதல் விசிட் டெல்லியில் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெறும். ஒவ்வொரு குழுவுக்கும் நகரம் மற்றும் உட்பகுதிகளைச் சுற்றிப்பார்க்க குறைந்தபட்சம் எட்டு நாள்கள் வழங்கப்படும். இது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறவுள்ளது.
கோரிக்கை ஏற்பு
பஞ்சாப் மாநில பொறுப்பாளரான ஏஐசிசி பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத், புதன்கிழமை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது, அவரிடம் மாநில பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். பஞ்சாபில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்த ராவத், தற்போது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் பணியாற்ற விரும்பியுள்ளார். அதே நேரத்தில் தான் பஞ்சாப்பிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. ராவத்தின் கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதால், விரைவில் காங்கிரஸ் உயர்மட்ட குழு பஞ்சாப்பிற்கு புதிய காங்கிரஸ் பொறுப்பாளரை நியமிக்கும் என தெரிகிறது.
குறிப்பு பகிர்தல்
உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முதல் நேரடியாக வழக்கு விசாரணை தொடங்குவதால், கொரோனா நெறிமுறைகளுடன் பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்க வரும் அனைத்து செய்தி நிறுவனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களும் தங்களுக்கு அட்டவணை ஒன்றைத் தயாரிக்க வேண்டும். அன்றைய தினம் நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கும் நபர், மற்ற ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன் மூலம், நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.