லோக் சபாவில் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும், பா.ஜ.க எம்.பி.யின் கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரினார்.
ராகுல் காந்தி எம்.பி.யாக லோக் சபாவுக்குத் திரும்பிய நாளில், பா.ஜ.க தலைவர் நிஷிகாந்த் துபே, காங்கிரஸ் தேசவிரோதிகளுடனும், சீனாவுடனும் சேர்ந்து நாட்டைப் பிரித்து அராஜகத்தை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். மக்களவை உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை நண்பகலில் கூடியதும், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தியுடன் சபைக்குள் நுழைந்து, “பாரத் ஜோடோ பாரத் ஜோடோ”, “ராகுல் காந்தி ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். பின்னர், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே எழுந்து நின்று, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக வெளி சக்திகளுடன் இணைந்த ‘சின்ன சின்ன கும்பல்’ மற்றும் ‘சில ஊடகங்கள்’ ஆகியவற்றை அம்பலப்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசை எதிர்க்க காங்கிரசுக்கு சீனா பணம் தருவதாக குற்றம் சாட்டினார். நிஷிகாந்த் துபே, நரேந்திர மோடி அரசாங்கத்தை எதிர்க்க காங்கிரஸ் தலைவர்கள் 2016-ல் சீனர்களை சந்தித்தனர் என்று குற்றம் சாட்டினார்.
“அவர்கள் சீனப் படைகள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் இந்தியாவைப் பிளவுபடுத்த விரும்புகிறார்கள்” என்று நிஷிகாந்த் துபே கூச்சலிட்டார். இதற்கு பா.ஜ.க எம்.பி.க்கள் தங்கள் மேசைகளைத் தட்டி ஆதரவளித்தனர். “2005 மற்றும் 2014-க்கு இடையில், நெருக்கடியான போதெல்லாம், காங்கிரஸ் சீனாவிடம் இருந்து பணம் பெற்றது. 2008-ல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரையும் அழைத்திருந்தனர். 2016-ல், டோக்லாம் நெருக்கடியின் போது அவர்கள் சீனர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்” என பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் மேலும் கூறினார். காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய சிங் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரின் பெயரையும் அவர் குறிப்பிட்டார். மாவோயிஸ்டுகள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு எப்படி பணம் கொடுக்கப்பட்டது என்பதை நியூயார்க் டைம்ஸ் செய்தி விளக்கியதாக நிஷிகாந்த் துபே கூறினார்.
மக்களவை சபாநாயகர் இருக்கையில் இருந்த கிரிட் சோலங்கி அன்றைய அலுவல்களை தொடர முயன்றாலும், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கூச்சலிட்டதையடுத்து அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சுற்றி திரண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபேயின் மைக் முழுவதும் எப்படி ஆனில் (On) இருந்தது என்றும், அவரது குற்றச்சாட்டுகளை பதிவுகளில் இருந்து நீக்குமாறு சபாநாயகரைச் சந்தித்து அவரை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டனர்.
சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, துபேயின் குற்றச்சாட்டுகளை பொய்கள், அவதூறு என்றும், பா.ஜ.க எம்.பி-யின் கருத்துக்களை அவை பதிவுகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரினார்.
“சபாநாயகர் இருக்கை செயல் தலைவருக்கு கொடுத்தபோது, அமைச்சர்களுக்கு மேசையில் காகிதங்களை வைக்க இடம் கொடுப்பது, நிஷிகாந்த் துபேயின் போன் மட்டும் -‘ஆன்’ வைக்கப்பட்டது .அவர் காங்கிரஸ் கட்சி மீது பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவரது குற்றச்சாட்டுகள் மக்களவையில் அவை நடவடிக்கைகளை நடத்துவதற்கான நடைமுறை விதிகளின் 353 விதியை அப்பட்டமாக மீறுவதாகும்” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதியுள்ளார்.
“எனவே, விதி 350-ன் கீழ், அவரது கருத்துக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய குற்றச்சாட்டை பதிவு செய்ய அனுமதித்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேலும் கூறினார்.
இதற்கிடையில், அவை காலை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மதியம் மீண்டும் அவை தொடங்கியபோது ராகுல் காந்தி மீண்டும் சபைக்கு திரும்பினார். உள்ளே நுழைந்ததும் இருக்கையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். மோடி குடும்பப்பெயர் அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததால், திங்கள்கிழமை அவரது எம்.பி பதவி மீண்டும் அளிக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.