”நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது, ஒருவர் எப்படி பலரை விட அதிகமாக (சிறப்பாக) இருக்கிறார்.”
ராஜ்யசபாவில் நரேந்திர மோடியின் உரை, அதானி குழுமத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடுமையான இடைவிடாத முழக்கங்களை சுட்டிக்காட்டியதாக தோன்றினாலும், பிரதமர் எவ்வித நோக்கமுமின்றி தனது கட்சிக்கு ஒரு பஞ்ச் லைன் கொடுத்திருக்கலாம்.
இதையும் படியுங்கள்: 2019-இல் என்.சி.பி பா.ஜ.கவை அணுகியது: ஃபட்னாவிஸ் பரபரப்பு பேச்சு
ஏனெனில், 2024 பொதுத் தேர்தலுக்கான கவுண்ட் டவுனைத் தொடங்கும் வேளையில், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளால் எதிர்பார்க்கப்படும் தடைகளைத் தாண்டிச் செல்ல, அதன் துருப்புச் சீட்டாக “மோடி vs மற்றவர்கள்” என்ற போட்டியை உருவாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
அதை விரிவுபடுத்தினால், கட்சியின் கவனம் மத்திய அரசு அல்லது மோடி அரசாங்கத்தின் திட்டங்களாக இருக்கும். பா.ஜ.க இதை ஒரு வெற்றியாளராக சில காலத்திற்கு முன்பு அடையாளம் கண்டது, அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையச் செய்தி என்னவென்றால், மோடி அரசாங்கம் தனது திட்டங்களின் பலன்களை கடைசி மனிதனுக்கும் சென்றடைவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது, மேலும் இது “உண்மையான மதச்சார்பின்மை” என்று தகுதிப்படுத்துகிறது, அதாவது திட்டங்களின் பலன் குறிப்பிட்ட மதம் அல்லது குழு என்று வரையறுக்கப்படவில்லை என்று கூறுகிறது, அல்லது பா.ஜ.க கூறுவது போல், “நிறைவான அரசியல்”.
இந்த திட்டங்களின் பயனாளிகள் பா.ஜ.க.,வால் கட்சியின் உறுதியான வாக்காளர்களாக பார்க்கப்படுகிறது, உத்தரபிரதேசம் போன்ற சமீபத்திய தேர்தல்களில் இது பலனளித்தது. பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு மோர்ச்சாவும் இப்போது பயிலரங்குகள், முகாம்கள் மற்றும் தெருமுனை கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும், அதன் திட்டங்களைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்கும், கட்டுரைகளை விநியோகம் செய்வதற்கும், குறும்படங்களை உருவாக்குவதற்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை, மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டங்களுக்கு மாநில அரசு பெயர் வாங்குவதற்கு (பலனை அனுபவிக்க) எதிராக எச்சரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மற்றும் டெல்லியில் இத்தகைய நகர்வுகளைக் குறிப்பிடுகையில், மன்சுக் மாண்டவியா, திட்டங்கள் மறுபெயரிடப்பட்டால், மத்திய அரசு நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறினார்.
சமீபத்தில், மத்திய அரசின் திட்டங்களை தவறாக நிர்வகிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் எதிர்ப்பை புறக்கணித்து, மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு உடனடியாக குழுக்களை அனுப்பியது.
2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைப் பெற்ற பிறகு இயல்பாக இருக்கும் சில சரிவை இது ஈடுசெய்யும் என்ற எதிர்பார்ப்பில், இன்னும் வெற்றிபெறாத பகுதிகளில் பா.ஜ.க.,வை விரிவுபடுத்துவதற்கான எளிதான பாதையாக இந்தத் திட்டப் பாதை கருதப்படுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், இந்த ஆண்டு ஒன்பது சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு மோடி அளித்த முக்கிய ஆலோசனை, அவர்களின் பாரம்பரிய ஆதரவுத் தளத்தைத் தாண்டி செயல்பட வேண்டும் என்பதுதான், இது “வாக்குகளுக்காக மட்டும் அல்ல” என்று அவர் வலியுறுத்திருந்தாலும்; அதே சமயம் கட்சியில் உள்ள “ஆதாயம் தேடுபவர்களுக்கு” சமூகங்கள் மற்றும் குழுக்களை பகைத்துக் கொள்வதில் இருந்து விலகி இருக்குமாறு அவர் விடுத்த எச்சரிக்கையும் அதே செய்தியின் ஒரு பகுதியாகும்.
பா.ஜ.க சிறுபான்மை மோர்ச்சா, மக்கள்தொகையில் 30%க்கும் அதிகமான சிறுபான்மையினர் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளை நான்கு மாத வெளியூர் திட்டத்திற்காக அடையாளம் கண்டுள்ளது.
அதனுடன், ஆண்டு முழுவதும் நடைபெறும் ஜி20 தலைவர் பதவிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பா.ஜ.க ஒரு அரசியல்வாதியாக உலகளவில் பிரதமரின் பிம்பத்தை புதுப்பிக்க முயல்கிறது. ‘பா.ஜ.க.,வை அறிந்துக்கொள்ளுங்கள்’ திட்டம் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அதன் பரபரப்பான, இடைவிடாத தேர்தல் முறை நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இருந்தபோதிலும், நாளின் முடிவில், பா.ஜ.க தொடர்ந்து மோடியின் மீது பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil