Advertisment

வேளாண் சட்டங்களை விமர்சித்த வருண் காந்தி, பிரேந்தர் சிங்; நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கிய பாஜக

வியாழக்கிழமை அன்று 80 உறுப்பினர்கள் அடங்கிய புதிய தேசிய நிர்வாகக் குழுவை அறிவித்தது பாஜக.

author-image
WebDesk
New Update
Varun Gandhi out after criticising farm laws

Liz Mathew

Advertisment

Varun Gandhi out after criticising farm laws : பாஜக அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு முக்கியத் தலைவர்களான வருண் காந்தி (எம்.பி) மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங் ஆகியோர் பாஜகவின் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை அன்று 80 உறுப்பினர்கள் அடங்கிய புதிய தேசிய நிர்வாகக் குழுவை அறிவித்தது பாஜக.

பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்களுடன், மூத்த கட்சி உறுப்பினர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் இந்த நிர்வாக குழுவில் இருக்கின்றனர்.

பிரேந்தர் சிங், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு தன்னுடைய ஆதரவை வழங்கினார். வருண் காந்தி லக்கிம்பூர் கேரி வன்முறையில் இறந்து போன விவசாயிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். உருவாக்கப்பட்ட புதிய கமிட்டியில் வருணின் தாய் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நீக்கப்பட்டுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறையில் அதிகம் பேசப்பட்ட இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா யார்?

பிலிபட் எம்.பி.யான வருண் காந்தி வியாழக்கிழமை அன்று, லக்கிம்பூர் கேரி வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் மூன்று எஸ்.யூ.வி. ரக வாகனங்கள் விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் மேலே, இவர்கள் தான் அப்பாவி விவசாயிகளின் மரணத்திற்கு பொறுப்புகூற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த வீடியோ தெளிவாக உள்ளது. கொலை செய்வதன் மூலம் போராட்டக்காரர்களை கட்டிப்போட இயலாது. அப்பாவி விவசாயிகள் சிந்திய இரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் ஆணவம் மற்றும் கொடுமை பற்றிய செய்தி நுழைவதற்கு முன்பு இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நிவாரண நடவடிக்கைகளை கோரிய காந்தி, சில பாஜக தலைவர்கள் போராட்டக்காரர்களை காலிஸ்தானியர்கள் என்று குறிப்பிட்டதையும் எதிர்த்தார்.

80 வழக்கமான உறுப்பினர்களை தவிர்த்து, இந்த நிர்வாக குழுவில் 50 சிறப்பு அழைப்பாளர்களும், 179 நிரந்தர அழைப்பாளார்களும் இருப்பதுண்டு. இந்த 179 நிரந்தரஅழைப்பாளர்களில் பாஜக முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிற தேசிய அலுவலகப் பணியாளர்கள் அடங்குவர்.

லக்கிம்பூர்: அமைச்சர் மகன் கார் மோதி தான் என் மகன் இறந்தான் – பத்திரிக்கையாளர் ராமனின் தந்தை வேதனை

தற்செயலாக, 80 நிர்வாகிகளில் 37 நபர்கள் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த பல அமைச்சர்களைத் தவிர. எந்தவொரு நிர்வாக பதவியும் இல்லாத உறுப்பினர்களுக்கு பாஜகவின் சிந்தனை பொறிமுறையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு இது குறைவான வாய்ப்பையே விட்டுச் செல்கிறது.

வருகின்ற நவம்பர் 7ம் தேதி அன்று புதிய தேசிய நிர்வாகக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. வர இருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசப்படும். வருகின்ற அக்டோபர் 18ம் தேதி அன்று கட்சி தலைவர் ஜெ.பி. நட்டா, தேசிய அலுவல் பணியாளர்கள் மற்றும் மோர்சா அமைப்பின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கட்சியின் சாசனப்படி தேசிய மற்றும் மாநில நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் நிலவியது.

உத்திரப்பிரதேச தேர்தல்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் கட்சி உருவாக்கிய புதிய குழுவில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் சித்தார்த் நாத் சிங், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கட்டியார், லோதி சமூகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் தலைவர் கல்யான் சிங்கின் மகனும் எம்.பியுமான ரஜ்வீர் சிங் ஆகியோர் இடம் பெறவில்லை. லோதி சமூகம், உ.பியில் பாஜகவிற்கு ஆதரவை வழங்கும் ஓ.பி.சி. பிரிவினரில் முக்கியமானவர்கள். ஆனாலும் மத்திய அமைச்சர் பி.எல். வெர்மா (மற்றொரு லோதி தலைவர்), சிறப்பு அழைப்பாளராக இடம் பெற்றுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள 80 உறுப்பினர்களில் 12 பேர் உ.பியை சேர்ந்தவர்கள். மேலும் 6 சிறப்பு அழைப்பாளர்கள் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இந்த குழுவில் ராஜ்யசபை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமியும் நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, விஜய் கோயல் மற்றும் எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் இதில் இடம்பெறவில்லை. மத்திய அமைச்சர் ப்ரஹ்லாத் படேலும் இந்த குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lakhimpur Violence Varun Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment