BJP-PDP Alliance Ends: ஜம்மு காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி நடத்தி வந்த ஆட்சி அதிருப்தி அளித்திருப்பதாகக் கூறி கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக. இந்த அறிவிப்பை காஷ்மீர் பாஜக மாநிலத் தலைவர் ராம் மாதவ் வெளியிட்டார்.
ஜம்மு காஷ்மீரில், தற்போது அட்சி நடத்தி வரும் மெஹபூபா முஃப்டி மற்றும் மஜக-விற்கு ஆதரவு அளித்து வந்தது பாஜக. இந்நிலையில் இன்று டெல்லியில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணி முறிவு குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ராம் மாதவ் இதனை அறிவித்தார்.
பாஜக - பிடிபி இடையே இருந்த கூட்டணி முறிவு :
6.27pm: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கூட்டணி முறிவு பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ட்விட்டரில் கருத்து. “காஷ்மீரில் வன்முறை நிலவுகின்றது என்பதை அறிய பாஜகாவிற்கு 3.5 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது. 600 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பின்பு தான் இக்கூட்டணி ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும் எண்ணம் வந்திருக்கின்றது என்பது வருந்தத்தக்கது. இங்கு ஆட்சி இவ்வளவு மோசமாக நடக்கின்றது என்று தெரிந்தும் ஏன் கூட்டணியை இத்தனை நாட்களுக்கு நீட்டித்தீர்கள்” என்றும் கேள்வி கேட்டுள்ளார் உத்தவ் தாக்கரே.
5:55pm: "பணமதிப்பிழக்க நீக்கத்தினால், காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டது என்று கூறிய பாஜகவிற்கு இப்போது என்ன ஆனது? எதற்காக பிடிபி-க்கு அளித்துவந்த ஆதரவினை விளக்கிக் கொண்டது?" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி.
5.48pm: பாஜக - பிடிபி கூட்டணி முறிவினைத் தொடர்ந்து, டெல்லியின் முதலமைச்சர் அதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருடைய கருத்தினை பகிர்ந்துள்ளார்.
3 years lost in the valley,
3 years that saw huge civilian & army casualties,
3 years later the valley is worse-off from where it stood then.
This is what happens when you put politics over people.
I will not allow Delhi to suffer because of dirty politics of Modi Govt
— Arvind Kejriwal (@ArvindKejriwal) 19 June 2018
5.40pm: உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்கள் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜ்தி தோவல் மற்றும் ஸ்பெசல் செக்ரட்ரி ரினா மித்ரா.
5.11pm: “இராஜினாமா முடிவு சரியானது தான். என்னுடைய இராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டேன். வேறெந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ள விருப்பமும் இல்லை” என மெஹபூபா முஃப்தி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேச்சு.
5.10pm: "இந்த கூட்டணியில் எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் காஷ்மீர் மக்களுக்காக உழைத்திருக்கின்றோம். ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் பகுதிகளை எந்த ஒரு பிரச்சனையின்றி ஒன்றிணைக்கவே விரும்பினோம். இதனை செயல்படுத்தும் முனைப்பில் இருக்கும் போது பிடிபி உறுப்பினர்கள் நிறைய இன்னல்களை சந்தித்திருக்கின்றார்கள். முழுவதுமான தாக்குதல் நிறுத்தம், பாகிஸ்தானுடனான பிரதம அமைச்சரின் அமைதி பேச்சு வார்த்தை, மற்றும் 11,000 இளைஞர்களின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை ரத்து செய்தல் என பெரிய கனவுகளுடன் அமைக்கப்பட்டது இக்கூட்டணி” - மெஹபூபா
5.08pm: "இக்கூட்டணி அதிகாரத்திற்காகவும் ஆட்சிக்காகவும் அமைக்கப்படவில்லை. ஜம்மு மற்றும் காஷ்மீர் வாசிகளை எக்காரணம் கொண்டும் அந்நியர்களைப் போல் நடத்த இயலாது” - மெஹபூபா
5.06pm: "இக்கூட்டணி ஆட்சி, மக்கள் மத்தியில் அமைதியையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது. அதனால் தான் மத்திய அரசிடம் பேசி தாக்குதல் நிறுத்த நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்" -மெஹபூபா
5.05pm: "என்னுடைய இராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டேன். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்த எங்களுக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது” - பத்திரிக்கையாளர் சந்திப்பில் மெஹபூபா
5.01pm: தன்னுடைய முதலமைச்சர் பதவியினை இராஜினாமா செய்த மெஹபூபா முஃப்தி தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றார்.
4.20pm: “காஷ்மீர் வன்முறையை காரணம் காட்டி பிடிபி கூட்டணியில் இருந்து பாஜக விலகியுள்ளது உண்மையென்றால், இந்த வன்முறைக்கு பாஜக-வும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் பிடிபி தனியாக ஆட்சி நடத்தவில்லை. இருவரும் இணைந்தே காஷ்மீர் ஆட்சி செய்தனர். இந்த கூட்டணியில் பிடிபி-யை மட்டும் குற்றவாளியாக்க பாஜக முயற்சி செய்கிறது.” என ஒமர் கூறினார். மேலும், “இந்த கூட்டணி முறிந்ததை பிற கட்சிகள் நினைப்பது போல நாங்கள் கொண்டாடவில்லை. இந்த முறிவு வருத்தம் அளிக்கக் கூடிய செயல் தான். ஒரு மாநிலத்தின் ஆட்சி ஆளுநர் கைக்கு செல்வதை யாரும் விரும்ப மாட்டார்கள்.” என்றும் கூறினார்.
4.15pm: ஒமர் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பு. இந்த சந்திப்பில், “இந்த கூட்டணி முறிவு நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.” என கூறினார்.
3.52pm: நேஷனல் கான்ஃபெரன்ஸ் ஒமர் அப்துல்லா, காஷ்மீர் ஆளுநர் என்.என்.வொஹ்ராவுடன் சந்திப்பு.
3.50pm : இன்று மாலை 5 மணியளவில், பிடிபி கட்சி கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிடிபி சேர்ந்த நயீம் அக்தர் தெரிவித்துள்ளார்.
3.30pm: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி தனது ராஜினாமா கடிதத்தை காஷ்மீர் ஆளுநரிடம் அளித்ததாக, பிடிபி சேர்ந்த நயீம் அக்தர் தெரிவித்துள்ளார்.
We will talk in detail at 5pm, meanwhile she (Mehbooba Mufti) has submitted her resignation (as J&K CM) to the Governor: Naeem Akhtar, PDP pic.twitter.com/w8vNI6XeRw
— ANI (@ANI) 19 June 2018
3.00pm: காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ராம் மாதவ் செய்தியாளர்கள் சந்திப்பு.
#WATCH BJP addresses the media in Delhi https://t.co/6QF3wL2Xdz
— ANI (@ANI) 19 June 2018
2.40pm : காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ராம் மாதவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எங்களுக்கு இனியும் இந்த ஆட்சிக்கு ஆதரவு அளிக்க விருப்பமில்லை. வன்முறை, பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வாழ அமைதியற்ற இடமாக காஷ்மீர் உள்ளது.” என கூறினார்.
Terrorism, violence and radicalisation have risen and fundamental rights of the citizens are under danger in the Valley. #ShujaatBukhari's killing is an example: Ram Madhav, BJP pic.twitter.com/0T0HLurWVu
— ANI (@ANI) 19 June 2018
2.30pm : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பிடிபி கட்சியுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக பாஜக அறிவிப்பு
BJP pulls out of an alliance with PDP in Jammu & Kashmir: Sources #JammuAndKashmir pic.twitter.com/BQD4yx0E6d
— ANI (@ANI) 19 June 2018
காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை, பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை போன்ற சம்பவங்களை காரணமாகக் காட்டி கூட்டணி முறிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.