மோடிக்கு பாராட்டு; எதிர்கட்சிகள் மீது தாக்கு; தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக செயற்குழுவில் தீர்மானம்

Ahead of polls, BJP lauds PM, accuses Opposition of ‘extreme hate’: பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டும் பாஜக செயற்குழு; எதிர்கட்சிகள் வெறுப்புடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையைப் பாராட்டியதுடன், எதிர்க்கட்சிகள் “சந்தர்ப்பவாதம்” மற்றும் “தீவிர வெறுப்பு” மனநிலையுடன் மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

கொரோனா முதல் காலநிலை மாற்றம் குறித்த அவரது நிலைப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு என பல்வேறு விஷயங்களில் மோடி அரசாங்கத்தை பாராட்டுவதில் பெரிதும் அர்ப்பணிப்புடன், உத்தரபிரதேசம் உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று கணித்துள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 18 அம்ச தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நாள் கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, ஆதித்யநாத் தவிர, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் விளக்கங்களை வழங்கினர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய இடைத்தேர்தலில் கட்சியின் செயல்பாடுகளை குறிப்பிட்டு, வரும் தேர்தல்கள் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

மோடியின் கீழ் இந்தியா உலகளவில் புதிய உயரங்களை எட்டியபோது, ​​​​எதிர்கட்சிகள் “கேவல் அவுர் கேவல் அசீம் நஃப்ரத் கி மான்சிக்தா (தீவிர வெறுப்பின் மனநிலை)” மற்றும் சதித்திட்டங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிதைக்க முயற்சிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புகின்றனர் தீர்மானம் கூறியது. “தொற்றுநோயின் போது எதிர்க்கட்சிகள் ஒருபோதும் களத்திற்கு வரவில்லை, சந்தேகத்தை பரப்புவதற்காக ட்விட்டரில் பதிவிடுவதுடன் தங்களை நிறுத்திக் கொண்டனர்” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்மானத்தின் மீதான விளக்கக்கூட்டத்தில் கூறினார்.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க, அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை குறைத்ததாகவும், மாநிலங்களில் உள்ள பாஜக அரசாங்கங்கள் வரிகளை மேலும் குறைத்ததாகவும் அக்கட்சி கூறியது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மோடியின் தலைமை பண்பை மட்டுமல்லாது, தீர்மானம் “வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்திற்கு இயல்புநிலையை திரும்பக் கொண்டு வந்த” நடவடிக்கைகளுக்காகவும் பிரதமரை பாராட்டியது. மற்ற நாடுகள் அதிக பணம் அச்சடித்தல் மற்றும் கடன் வாங்கிய நிலையில், ஆத்மநிர்பர்தா போன்ற நடவடிக்கைகளை மோடி வலியுறுத்தினார்.

COP26 இல் மோடி ஆற்றிய உரையைப் பாராட்டிய தீர்மானம், இது காலநிலைப் பிரச்சினையில் மோடியின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று கூறியது. 2014 முதல் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதற்காக பிரதமரை தீர்மானம் பாராட்டியது.

மேற்கு வங்காளத்தில் பாஜக தொண்டர்களுக்கு “ஸ்பான்சர் செய்யப்பட்ட வன்முறை”க்கு எதிராக ஆளும் திரிணாமுல் காங்கிரஸைத் தாக்கும் அதே வேளையில், பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களிலும், பல இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வியக்கத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியதாக தீர்மானம் குறிப்பிட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் “பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சி” என்ற அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சி முயற்சிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை முடிப்பது குறித்தும் தீர்மானம் கூறியது.

விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு, விவசாய சங்கங்களுடன் பேசுவதற்கு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மூன்று சட்டங்களில் அவர்களின் குறைகளை பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் சீதாராமன் கூறினார். புதிய பயிர்களின் வெளியீடு, விவசாயக் கடன், PM-KISAN திட்டம், கிசான் ரயில் உள்ளிட்ட விவசாயிகளின் நலனுக்கான அரசின் திட்டங்களைத் தீர்மானம் எடுத்துரைத்தது.

இருப்பினும், குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் சீனாவுடனான இராணுவ நிலைப்பாட்டின் சர்ச்சைக்குரிய சிக்கல்களைத் தவிர, வேளாண் சட்டங்கள் குறித்தும் எதுவும் விவாதிக்கப்படவில்லை. தேர்தல் நடைபெறும் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும், ஹரியானாவிலும் விவசாயிகளின் போராட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து கவனிக்கிறது, அதே நேரத்தில் சீனா உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் தனது ஆக்கிரமிப்பு நிலையைப் பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான் கையகப்படுத்தியுள்ள நிலையில், CAA சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் மோடியின் “தொலைநோக்கு” பார்வையைப் பாராட்டிய, தேசிய செயற்குழுவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் உரையில் தான் CAA பற்றிய ஒரே குறிப்பு இருந்தது.

தற்செயலாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் மோடி கலந்து கொண்ட பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வேளாண் சட்டங்கள் மற்றும் எல்லைப் பதற்றம் ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி 21 தீர்மானம், கொரோனா மீதான மெய்நிகர் வெற்றியை அறிவிக்கும் போது, ​​”சீனாவுடனான நிலைமை” பற்றி குறிப்பிட்டது மற்றும் “இந்தியா தனது எல்லைகளில் எந்த விரிவாக்க உத்தியையும் வெற்றிபெற அனுமதிக்காது.” என்றும் தீர்மானம் கூறியது.

வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை, அவை “விவசாயிகளின் நலன்” என்று சட்டத்தை நியாயப்படுத்தியது மற்றும் அதற்குள் பேச்சு வார்த்தைகள் தடுமாறின போதிலும், பிரதமரை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்காகப் பாராட்டினர்.

தொடக்க உரையில், ஜே.பி.நட்டா தனது முன்னோடி அமித் ஷாவை மேற்கோள் காட்டினார், அவர் கட்சியின் உச்சம் இன்னும் வரவில்லை என்று கூறினார். மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் பேசிய அவர், அரசியல் அறிவியலின் கண்ணோட்டத்தில், இந்திய வரலாற்றில் சில ஒற்றுமைகள் இல்லை என்று கூறினார்.

நட்டாவின் உரையைத் தொடர்ந்து ஆதித்யநாத் அரசியல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இக்கூட்டத்தில் யோகி நேரடியாக கலந்துகொண்டார். பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இது ​​உத்திரபிரதேச தேர்தலுக்கு கட்சி அளிக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். யோகியை ஏன் அரசியல் தீர்மானத்தை முன்வைக்கச் சொன்னார்கள் என்ற கேள்விக்கு, இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அவர் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வர். கொரோனா நோயைக் கையாள்வதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் மாநிலம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது… ஏன் செய்யக்கூடாது?” என்றார்.

மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜி கிஷன் ரெட்டி, அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முதல்வர்கள் என்.பிரேன் சிங் (மணிப்பூர்), பிரமோத் சாவந்த் (கோவா), புஷ்கர் சிங் தாமி (உத்தரகாண்ட்) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்த தீர்மானத்தை ஆதரித்தார். .

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டிலும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தடுப்பூசி திட்டம் குறித்தும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பொருளாதாரம் குறித்தும், ஆத்மநிர்பர் பாரத் மீது சிறப்பு கவனம் செலுத்தியும் பேசினர்.

கட்சி அரசியலமைப்பின்படி செயற்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும், கொரோனா வெடித்த பிறகு முதல் முறையாக பாஜக தேசிய செயற்குழு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தேசிய நிர்வாகிகள், தலைநகரில் உள்ள அதன் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்ட நிலையில், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆன்லைனில் இணைந்தனர்.

மூத்த கட்சித் தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் டெல்லியில் உள்ள அவர்களது இல்லங்களில் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp praises pm modi government assembly elections

Next Story
பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்….அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com