பாஜக தலைவரானார் ஜே.பி.நட்டா; மோடியுடன் 20 ஆண்டு பிணைப்பு; அமித்ஷாவை வென்ற விசுவாசம்!

இமாச்சலப் பிரதேசத்தில் 1998-ம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக நரேந்திர மோடியை அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக அங்கே அனுப்பியிருந்தது. அப்போது மாநில சட்டசபையில்...

லிஸ் மேத்யூ
இமாச்சலப் பிரதேசத்தில் 1998-ம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக நரேந்திர மோடியை அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக அங்கே அனுப்பியிருந்தது. அப்போது மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த பாகவின் தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா இருந்தார். மோடியும் நட்டாவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டதால் தேர்தலில் பாஜகவின் எண்ணிக்கை ஒன்பது முதல் 31 வரை உயர்ந்தது.

அப்போது அவர்கள் இடையே உருவான பிணைப்பு இன்னும் நீடிக்கிறது. மேலும் 59 வயதான ஜே.பி.நட்டா திங்கள்கிழமை பாஜகவின் தேசியத் தலைவராக முறையாகப் பொறுப்பேற்றபோது அவர்கள் இடையே ஏற்பட்ட பிணைப்பு தெளிவாகத் தெரிந்தது.

நட்டா பாஜகவின் மிக வெற்றிகரமான தலைவராக விளங்கிய அமித் ஷாவுக்குப் பிறகு, பிரதமர் மோடி, நட்டா தலைவராக இருக்கும் காலத்தில் கட்சி புதிய உயரங்களை எட்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

பாஜக உள்ளே இருப்பவர்கள் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் அமித்ஷாவின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்று கூறுகின்றனர். மோடி நட்டாவை ஆதரித்தது மட்டுமல்லாமல், 59 வயதான நட்டாவை ஒரு மென்மையான மனிதர் என்றும் தலைமைக்கு விசுவாசி என்றும் அழைத்தார்.

முன்னதாக பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரியுடன் நெருக்கமாக பணியாற்றிய ஜே.பி.நட்டா, கடந்த சில ஆண்டுகளாக முதல் பொதுச் செயலாளராகவும், பின்னர் செயல் தலைவராகவும் உள்துறை அமைச்சரின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அமித்ஷாவுடனான தனது விசுவாசத்தை நிரூபித்தார். அமித்ஷா மோடி அமைச்சரவையில் சேர்ந்தபின், ஜூன் மாதத்தில் நட்டா இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், நிழலாக தொடர்ந்து வருகிறார். அவர் ஒருபோதும் எல்லை மீறவில்லை.

பாஜக தலைவராக ஜே,பி.நட்டாவின் மறுக்க முடியாத உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. இது மோடியும் அமித்ஷாவும் நிர்ணயித்த பாதை தொடரும் என்பதைக் காட்டுகிறது.

மோடியுடனான நட்டாவின் தொடர்பு 20 ஆண்டுகள் பழமையானது. அதே வேளையில், கடந்த சில ஆண்டுகளாக பொதுச் செயலாளராகவும், செயல் தலைவராகவும் அமிஷாவுக்கு அவர் காட்டிய அக்கறையின் மூலம் நிரூபித்துள்ளார். பல சட்டமன்றத் தேர்தல்களின் பொறுப்பாளராக அவர் ஒரு திறமையான அமைப்பு ரீதியான மனிதராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

அமித்ஷா ஒரு ஒழுக்கமானவர் அதோடு ஆக்ரோஷமான செல்வந்தர் என்றாலும் நட்டா எளிதில் அணுகக்கூடியவர். ஒருபோதும் முரட்டுத்தனமாக அல்லது மோதல் போக்குடன் இருக்க மாட்டார். ஆனால், அவர் ஏதாவது செய்ய விரும்பினால் அவர் கடுமையானவர் என்றும் அறியப்படுகிறது. அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட எந்தப் பதவியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் ஜனவரி 2017-இல் முதலமைச்சர் பதவிக்காக ஜெய்ராம் தாக்கூரிடம் நட்டா தோல்வியடைந்தார். ஜூன் 2019 இல், அவர் பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மோடி மற்றும் அமித்ஷா ஆகிய உயர் தலைமைகள் இருப்பைத் தவிர, கட்சித் தலைவராக நட்டாவின் வளர்ச்சியைக் குறைக்கக் கூடியது என்னவென்றால், அவர் ஒரு இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இம்மாநிலம் அரசியல் வெற்றிகளில் மிகக் குறைவானது. ஒரு பிராமணராக இருந்தாலும், அவர் தலைமையில் உள்ள பாஜகவின் சாதி இயக்கவியலில் எதிர் அழுத்தத்தை வழங்குகிறார்.

பாஜகவின் தலைவர் பதவிக்கு வேறு எந்த பெயரும் இல்லை. புதிய பாஜக தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜக தலைவர் பிரேம் குமார் துமலின் கீழ் நீண்ட காலமாக செயல்பட்ட நட்டா, பாஜக ஜெய்ராம் தாக்கூரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இந்த பதவி இறுதியாக தன்னுடையது என்று நினைத்தார். அமித்ஷா நட்டாவை தேர்தல் பொறுப்பாளராகவும் பிரச்சார பொறுப்பாளராகவும் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பினார். சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் அற்புதமான வெற்றி பெற்றது. 80 இடங்களில் 62 இடங்களுடன் வெற்றி பெற்று மத்தியில் நட்டாவின் நிலையை உறுதிப்படுத்தியது.

முன்னதாக, 2013-இல் சத்தீஸ்கரில் தோல்வியுற்றதில் இருந்து வெற்றியைப் பறிக்க ஆர்எஸ்எஸ் தலைவரும் இணை பொதுச் செயலாளருமான சவுதன் சிங்குடன் அவர் நெருக்கமாக பணியாற்றினார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியில் ஆக்கபூர்வமான பங்கைக் கொண்டிருந்ததாகக் கருதப்பட்ட அவருக்கு மோடியால் வெகுமதியாக உடல்நலம் மற்றும் குடும்ப விவகாரங்கள் துறை கிடைத்தது.

பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவராக ஏபிவிபியில் சேர்ந்தார். அங்கு தொடங்கிய ஆர்ப்பாட்டங்களுக்கு சாட்சியாக இருந்தார். இந்திரா காந்தி அரசாங்கத்தின் அவசரநிலை மற்றும் தூக்கியெறியலுக்கு வழிவகுத்தார். பின்னர், சட்டம் படிக்கும் போது இமாச்சலில் உள்ள ஏபிவிபி அணிகளில் நட்டா உயர்ந்தார். 1985 மற்றும் 1989 க்கு இடையில் அதன் தேசிய பொது செயலாளராகவும் ஆனார்.

டெல்லியில் உள்ள ஏபிவிபியின் நிறுவன செயலாளராக, தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர்களுடனும், ஜே.என்.யு.வின் தாராள சிந்தனையாளர்கள் குழுவுடனும் நட்டா செயல்பட்டார்.

பின்னர் அவர் பி.ஜே.ஒய்.எம்-மில் சேர்ந்தார். அதன் தேசிய தலைவராக (1991-93) ராஜ்நாத் சிங்கிடம் இருந்து பொறுப்பேற்றார். படிப்படியாக அவர் பாஜகவுக்கு மாறினார்.

1993-இல், அவர் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 1998-ம் ஆண்டில், அவர் மாநில சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கட்சி பொதுச் செயலாளராக இருந்து வெளியேறுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் இலாகாவைக் கையாண்டார். அமித்ஷாவைத் தவிர கட்கரி மற்றும் ராஜ்நாத் ஆகிய மூன்று பாஜக தலைவர்களின் கீழ் பொதுச் செயலாளராக நட்டா பணியாற்றினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close