பீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி

“கோவிட்-19 தடுப்பூசி பெரிய அளவில் உற்பத்திக்கு கிடைத்தவுடன், பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் வாக்குறுதி” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

By: October 22, 2020, 4:42:35 PM

பீகார் தேர்தலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி பீகார் தேர்தலில் 11 உறுதிமொழிகளில் முதல் வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய தேர்தல் அறிக்கையில் ஒரு தடுப்பூசி வழங்குவதற்கான வாக்குறுதியானது பாஜகவின் விரக்தியைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

பீகாரில் எதிர்க்கட்சிகள் வேலைவாய்ப்பின்மை பிரச்னையை எழுப்பியதோடு, எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் அறிவித்த 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உறுதி அளித்தது பொதுக்கூட்டங்களில் கவனம் பெற்றது. எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளித்த இந்த அரசு வேலைவாய்ப்பு, பாஜக தேர்தல் அறிக்கையில் 11 வாக்குறுதிகளில் நான்காவதாக இடம்பெற்றுள்ளது. அதில், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் 19 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளன.

பீகார் தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில், “பீகாரில் உள்ள என்.டி.ஏ அரசாங்கம் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. ஐ.சி.எம்.ஆர் அனுமதியளித்த பின்னர் கோவிட்டுக்கான தடுப்பூசி கிடைக்கும்போது, ​​ஒவ்வொரு பீகார் குடிமக்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் என்பது எங்கள் வாக்குறுதியாகும்.” என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இலவச கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவது பற்றிய தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்திய நிர்மலா சீதாராமன், “அனைத்து நிலைகளையும் தாண்டிய பிறகு, குறைந்தது மூன்று தடுப்பூசிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. அவை உற்பத்தியில் உள்ளன. அதற்குப் பிறகு விஞ்ஞானிகள் இந்த தடுப்பூசி நன்றாக இருக்கிறது என்று சொன்னால், உற்பத்தி நடைபெறலாம். அரசாங்கத்தின் தலையீட்டால் நம்முடைய உற்பத்தி திறன் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. எனவே விஞ்ஞானிகளிடமிருந்து அனுமதி வரும்போது, ​​நம்முடைய தடுப்பூசி உற்பத்தி அத்தகைய அளவில் இருக்கும். நாங்கள் உறுதியளிப்பது என்னவென்றால், பீகாரில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதியாகும். பொறுப்புடன் நாங்கள் பீகார் மக்களுக்கு உறுதியளிக்கிறோம்” என்று சீதாராமன் கூறினார்.

இதனிடையே, ஆர்.ஜே.டி மாநிலங்களவை எம்.பி. மனோஜ் ஜா, “எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மக்கல் நல அரசில், ஒரு தொற்றுநோய்க்கு தடுப்பூசி போடுவதாக உறுதியளிப்பது என்பதும் அது தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தால், அது அவர்களுடைய சிந்தனையின் சீரழிவின் அளவைக் காட்டுகிறது.” என்று கூறினார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் 3 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களெ என்று உறுதியளித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் தனது பிரசாரங்களில், சம ஊதியம் கோரிய ஒப்பந்த ஆசிரியர்கள் மீது கோபம அடைந்த மாநில அரசை விமர்சித்து வருகின்றன.

தேர்தல் அறிக்கையில், சுகாதாரத் துறையில் “10,000 மருத்துவர்கள், 50,000 துணை மருத்துவ ஊழியர்கள், மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது எங்கள் உறுதிமொழியாகும். இதனுடன், பீகாரில் இரண்டாவது எய்ம்ஸ் 2024ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.” மேலும், அதில், 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அடுத்த தலைமுறை தகவல் தொழில்நுட்ப மையமாக பீகாரை உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விநியோகச் சங்கிலிகளை வளர்ப்பதற்கான வாக்குறுதியிலிருந்து 19 லட்சம் வேலை வாய்ப்புகளில் பெரும் பகுதி வரவிருக்கிறது. “புதிய 1000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு இணைக்கப்படும். மக்காச்சோளம், பழம், மக்கானா, பான், மருத்துவ தாவரங்கள் போன்ற சிறப்பு உற்பத்திகளின் மூலம் விநியோகச் சங்கிலிகள் உருவாக்கப்படும். இது மாநிலத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையிலும், குறைந்தபட்ச ஆதரவு விலை மீது பருப்பு வகைகளை வாங்குவதாக பாஜக உறுதியளித்துள்ளது. “விவசாயிகளை இடைத்தரகர்களிடமிருந்து காப்பாற்ற, எங்கள் அரசாங்கம் ஏற்கனவே சந்தைக் குழுக்களை வெளியேற்றிவிட்டது. வலுவான வேளாண்மை மற்றும் வளமான விவசாயி ஆகியோரின் காரணத்தை மேலும் மேம்படுத்துவதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் மற்றும் கோதுமையைத் தவிர பருப்பு வகைகளை இப்போது பெறுவோம்”என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bjp promises free covid vaccination in bihar elections bjp manifesto

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X