சீனாவிடம் இருந்து பெரும் நிதி பெற்ற ராஜீவ் காந்தி அறக்கட்டளை – கேள்விகளை அடுக்கும் பாஜக

புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி வரப்பெற்றுள்ளது என்று பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த நிதி சுதந்திர வணிக ஒப்பந்தத்தை இருநாடுகளிடையே ஊக்குவிக்க லஞ்சமாக அளிக்கப்பட்டதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.  இதுகுறித்து பாஜக…

By: Published: June 26, 2020, 11:11:03 AM

புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி வரப்பெற்றுள்ளது என்று பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த நிதி சுதந்திர வணிக ஒப்பந்தத்தை இருநாடுகளிடையே ஊக்குவிக்க லஞ்சமாக அளிக்கப்பட்டதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.


இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, “ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005-06 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு மற்றும் சீன தூதரகத்திலிருந்து 300,000 டாலர் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அதற்கு பதிலாக, சீன ஊடுருவல்கள் குறித்து பாஜக விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஸ்டேஷனுக்கு அருகில் வணிக வளாகங்கள்

“2005-06 ஆம் ஆண்டில் சீன அரசும், சீனத் தூதரகமும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஒரு மாபெரும் தொகையை வழங்கியதை இன்று நான் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது காங்கிரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான ரகசிய உறவு. இவர்கள் சீனாவிடம் இருந்து நிதி பெற்று பின்னர் நாட்டின் நலனில் அக்கறை இல்லாத ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வுகள் அதற்கான சூழலை உருவாக்குகின்றன. அவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட்டது, அவர்கள் என்ன ஆய்வு நடத்தினார்கள் என்பதை நாடு அறிய விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

கால்வான் பள்ளத்தாக்கு நிலைப்பாட்டை அரசாங்கம் கையாளுவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதைப் பற்றி நட்டா கூறுகையில், “அனைத்து அரசியல் கட்சிகளும் தேசத்தின் நலனுக்காகவே. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மோடி அவர்களே, நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள் என்று கூறினார்கள். ஒரு குடும்பத்தின் தவறுகள் எங்களுக்கு 43,000 சதுர கி.மீ நிலத்தை இழக்கச் செய்தன.

“நீங்கள் 300,000 டாலர் நன்கொடை பெற்றுக் கொண்டு எங்களுக்கு தேசியவாதத்தை கற்பிக்கிறீர்கள்” என்று நட்டா கூறினார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் காங்கிரஸை நோக்கி கேள்விகளை அடுக்கியுள்ளார்.

“சீனாவுடனான சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க, சீனா ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு லஞ்சமாக நிதியளித்ததா? காங்கிரஸ் தலைமை ஐமுகூ ஆட்சியில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 33 மடங்கு அதிகரித்தது, அதற்குத்தான் லஞ்சமாக நிதியா?” என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “அன்னியப் பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 1976 விதிமுறைகளை இந்த அன்பளிப்பு மீறியுள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்த ஒரு கல்வி அல்லது பண்பாட்டு அமைப்பும் அன்பளிப்பு பெறும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் அப்போதைய யுபிஏ அரசிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளை இதைத் தெரிவித்ததா?

2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது காங்கிரஸ். இதுவரை கட்சிக்கும் கட்சிக்கும் இடையேயான உறவுக்கான அவசியம் என்ன என்பதை காங்கிரஸ் கட்சி விளக்கவில்லை.

பிற அரசியல் கட்சிகளுடன் இப்படி எத்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காங்கிரஸ் மேற்கொண்டது என்பதை அக்கட்சி விளக்க வேண்டும்” என்று ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆர்ஜிஎஃப் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா மற்றும் பி சிதம்பரம் தவிர சுமன் துபே ஆகியோர் அறங்காவலர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

அனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 12 வரை ரத்து

நன்கொடை குறித்த கேள்விகளை காங்கிரஸ் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக சீன ஊடுருவல்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய போதிலும், ஆர்ஜிஎஃப் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் மகாஜன் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.

வருடாந்த அறிக்கையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், பொருளாதார வல்லுநருமான பிபெக் டெப்ராய் டிசம்பர் 12, 2005 வரை ஆர்ஜிஐசிஎஸ் இயக்குநராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, பி டி கௌசிக் செயல் இயக்குநராக பொறுப்பேற்றார். இதுகுறித்து டெப்ராய்-ஐ தொடர்பு கொண்ட போது, “எனக்கு இது தெரியும், ஆனால் நான் சென்ற பிறகு இது நடந்தது” என்று கூறினார். ஆனால், கௌசிக் தொடர்பு கொள்ள முடியவில்லை.

கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் எதிரான “தவறான மற்றும் மோசமான பிரச்சாரம்” என்று பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bjp questions china donation to rgf congress about incursions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X