2022 தேர்தலின் முக்கிய அம்சங்கள், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்தின் மீது வைத்திருக்கும் வலிமையான, குறையாத ஆதிக்கம்; வாக்காளர்களில் ஒரு பகுதியினர் வெளியாரை ஏற்கத் தயாராக இருப்பது மற்றும் சோர்ந்துபோன காங்கிரஸின் நிராகரிப்பு ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
குஜராத் மக்கள் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததன் மூலம், இந்த தேர்தல் அம்மாநிலத்தில் வரலாறு படைத்துள்ளது: குஜராத் மக்கள் பா.ஜ.க-வுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளையும், இந்துத்துவா அலை என்ற கணக்கில் 150-க்கும் மேல் இடங்களையும் அளித்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில், குஜராத் எதிர்க்கட்சி இடத்தில் ஒரு புதிய அரசியல் கட்சிக்கு இடமளித்திருக்கிறது.
2022 தேர்தலின் முக்கிய அம்சங்கள், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்தின் மீது வைத்திருக்கும் வலிமையான, குறையாத ஆதிக்கம்; குஜராத் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் வெளியாரை ஏற்கத் தயாராக இருப்பதும் சோர்ந்துபோன காங்கிரஸின் நிராகரிப்பும் என பல பார்வைகள் அடங்கியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பா.ஜ.க-வில் உள்ள பல தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியை நிராகரித்துள்ளனர். குஜராத் ஒருபோதும் மூன்றாவது அணிக்கு இடம் கொடுக்காது. பாஜக – காங்கிரஸ் இடையே மட்டுமே போட்டி என்று வாதிட்டனர்.
டிசம்பர் 5-ம் தேதி, தேர்தல் முடிந்த பிறகு, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆம் ஆத்மிக்கு ‘ஒரு இடம் கூட கிடைக்காது’ என்று கூறினார். ஆனால், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களை வென்றுள்ளது. அவற்றில் 2 இடங்கள் பா.ஜ.க-விடம் இருந்தும், 2 இடங்கள் காங்கிரஸிடமிருந்தும் வெற்றி பெற்றுள்ளது. இவை அனைத்தும் குஜராத்தின் அரசியல் பாதையை நிர்ணயித்த தீபகற்பப் பகுதியான சௌராஷ்டிராவின் கிராமப்புறப் பகுதி ஆகும். ஆம் ஆத்மி வெற்றி பெற்ற 5வது இடத்தில் மத்திய குஜராத்தில் பாரதிய பழங்குடி கட்சி வேட்பாளரை தோற்கடித்தது.
2017 மற்றும் 2022 பிரச்சாரங்களில் மோடி முக்கிய நபராக இருந்தார். கடந்த முறை, பட்டிதார் இடஒதுக்கீடு போராட்டமும், விவசாயிள் இடையே ஏற்பட்ட அதிருப்தியும் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தது. இந்த முறை, அவர் 2024-ல் பிரதமராக மீண்டும் வருவதற்கு சட்டமன்ற வெற்றியை தேவையான நடவடிக்கையாக சேர்தார் – அது பலரையும் தாக்கியது.
2022-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்தது. காங்கிரஸ் 41%-ல் இருந்து 27.3% ஆகவும், வெறும் 17 இடங்களாகவும் மிகக் கடுமையாகச் குறைந்தது.
குஜராத் வாக்காளர்கள் புதிய, வலிமையான, இளம் தலைவர்களுக்கான அரசியல் வரவேற்பு இல்லை என்றாலும், அவர்களுக்கும் வாய்ப்புகள் திறந்திருப்பதற்கான ஒரு சமிக்ஞையாக இந்தத் தேர்தல் உள்ளது. 2017-ல் காங்கிரஸ் வெற்றி முகமாக இருந்த ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் – அந்தந்த கட்சிகளுக்குள் சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றனர்.
பர் தாபி நர்மதா யோஜனாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஆனந்த் படேல் மற்றும் பா.ஜ.க எதிர்ப்பாளர் தவல்சிங் ஜாலா ஆகியோர் சுயேட்சையாக வெற்றி பெற்றனர். ஆம் ஆத்மி வேட்பாளர்களைத் தவிர, அனைவரும் அறிமுக வேட்பாளர்கள்தான்.
அகமதாபாத்தைச் சேர்ந்த உயர்மட்ட பா.ஜ.க தலைவர் மோடி ஜாகர்நாத், காங்கிரஸும் அதிக நம்பிக்கையுடன் இருந்த ஆம் ஆத்மியும் தோல்வியடைந்தது என்று கூறினார். “காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பிரித்ததால் பல இடங்களில் பா.ஜ.க வென்றது” என்று ஒப்புக்கொள்கிறார். காவி கட்சியின் தொண்டர்களும் ஆம் ஆத்மியின் ஆக்ரோஷமான பிரச்சாரத்தால் கிளர்ந்தெழுந்தனர் என்று கூறுகிறார். கட்சி இலவசங்களை விமர்சித்தாலும் இலவசமும் காரணம் என்று கூறினார்.
“அவர்கள் எங்களைக் கண்காணித்தார்கள், அல்லது காங்கிரஸின் பிரச்சாரம் மிகவும் பலவீனமாக இருந்ததால் நாங்கள் மனநிறைவு அடைந்திருக்கலாம்” என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர் கூறுகிறார்.
குஜராத்தில் பா.ஜ.க அலை
பா.ஜ.க-வில் சீட் கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கட்சிக்குள் அதிருப்தி கொண்டிருந்தாலும், “மோடியின் 30 தேர்தல் கூட்டங்கள் மற்றும் அமித்ஷாவின் மைக்ரோ மேனேஜ்மென்ட்” மூலம் கட்சி தனது அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்தது என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
காங்கிரஸைப் பொறுத்தவரை, உறுதியான இடங்கள்கூட தோல்வியடைந்தது. பழங்குடியினர் காங்கிரசை நிராகரித்தனர். அதன் முக்கியஸ்தர்கள் தோற்றனர். காங்கிரஸ் வாக்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தன.
தெற்கு மற்றும் வடக்கு குஜராத்தின் உள்ளடங்கிய பழங்குடியின கிராமங்களில், கெஜ்ரிவால் மற்றும் இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் இலவச கல்வி என்ற அவரது வாக்குறுதி ஒரு பேசுபொருளாக இருந்தது, அங்கு காங்கிரஸின் ரூ.500- எல்பிஜி சிலிண்டர் எடுபடவில்லை.
ஆம் ஆத்மி கட்சி குறைந்த பட்சம் 30 இடங்களில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி இரண்டாம் இடத்தை பிடித்தது. இருப்பினும், அதன் மாநில தலைவர் கோபால் இத்தாலியா மற்றும் அதன் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி உட்பட அதன் 4 முக்கிய தலைவர்கள் தோற்றனர்.
ஒரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், “குஜராத் மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மறைந்த அகமது படேல் போன்ற தலைவர்களின் இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. அவர் ஒரு தலைசிறந்த வியூகவாதி” என்று கூறினார்.
2017-ல் 41.44 சதவீத வாக்குகளைப் பெற்றதற்காக ராகுல் காந்திக்கு கட்சி பெருமை அளித்தது, ஆனால், அவர் கூட இந்த முறை செயல்பாட்டில் காணவில்லை – இங்கே அவருடைய யாத்திரையின் எந்த எதிரொலியையும் பார்க்க முடியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“