scorecardresearch

2024 மக்களவை தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவின் செயல் திட்டம்: இந்த மாநிலங்களுக்கு  கூடுதல் கவனம்  

2024-ம் மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக பிரத்யேக செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளாது. இந்நிலையில் இந்த வருடம் இறுதிக்குள் 100 பேரணிகளை பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட உள்ளன.

2024 மக்களவை தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவின் செயல் திட்டம்: இந்த மாநிலங்களுக்கு  கூடுதல் கவனம்  

2024-ம் மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக பிரத்யேக செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளாது. இந்நிலையில் இந்த வருடம் இறுதிக்குள் 100 பேரணிகளை பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட உள்ளன.

2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான செயல்வடிவத்தை தற்போதே பாஜக வடிமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயல் திட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடி தலைமையில் 100 பேரணிகள் நடத்தப்பட உள்ளது. பெரிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. 160 முக்கிய தொகுதிகளில் தீவிர பரப்புரை செய்யப்பட உள்ளது.

பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் வெளியாக உள்ளன.  குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கத்தின் மீது கூடுதல் கவனத்தை பாஜக செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நடத்திட்டங்கள், மற்றும் அறிவிப்புகளை வெளியிட உள்ள பிரதமர், செப்டம்பர் மாதத்தை தொடர்ந்து      தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

பெண்களுக்கான சிறந்த திட்டமாக மகிள மோர்ச்சாவை பாஜக கட்டமைத்துள்ளது. பெண்களுக்கான மத்திய அரசின் திட்டம் தொடர்பாக கூடுதல் வலுவான பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

சிறுபான்மயினர் மொர்சாவில், 60 மக்களை தொகுதியை தேர்வு செய்து, 30 %-க்கு மேலாக சிறுபான்மையினர் மக்கள் தொகை  இருக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்  செயல் திட்டத்தை இறுதி செய்யும். இதில் மூத்த தலைவர்களான சுனில் பன்சல்,வினோத் தாவ்டி,  தருண் சுங் ஆகியோர் நடைபெறும் பொதுக்கூட்டம், பேரணிகளில் மாற்றம் இருந்தால் அதை தெரிவிப்பார்கள். மேலும் இதன் பின்னூட்டத்த பாஜகவின் தலைமைக்கு இக்குழு  வழங்கும் .

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp readies 2024 blueprint