Advertisment

பா.ஜ.க சாதனை வெற்றிக்குப் பின்னால்… சுறுசுறுப்பான தலைமை; மோடி - அமித்ஷா செல்வாக்கு

குஜராத்தில் ஆளும்கட்சி பா.ஜ.க அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பை மேற்கொண்டு, தேர்தலுக்கு தயாராக சில மாதங்களுக்கு முன்பே விரைவுபடுத்தியது. இப்போது, குஜராத்தில் 1985-ம் ஆண்டு அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியின் சாதனையை முறியடிக்கும் பாதையில் செல்கிறது.

author-image
WebDesk
New Update
பா.ஜ.க சாதனை வெற்றிக்குப் பின்னால்… சுறுசுறுப்பான தலைமை; மோடி - அமித்ஷா செல்வாக்கு

குஜராத்தில் ஆளும்கட்சி பா.ஜ.க அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பை மேற்கொண்டு, தேர்தலுக்கு தயாராக சில மாதங்களுக்கு முன்பே விரைவுபடுத்தியது. இப்போது, குஜராத்தில் 1985-ம் ஆண்டு அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியின் சாதனையை முறியடிக்கும் பாதையில் செல்கிறது.

Advertisment

ஆரம்பத்தில் தேர்தல் போக்கைப் பார்க்கும்போது, 2017-ல் பா.ஜ.க அதன் கோட்டைகளில் ஒன்றான குஜராத்தில் பிஜேபி ஒரு சாதனை வெற்றியை நோக்கிச் செல்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர பிரசாரத்தாலும், கட்சியின் திட்டமிடப்பட்ட உத்தியாலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன், 99 இடங்களுக்குள் வெற்றி பெற்ற பா.ஜ.க இந்த தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களை வெற்றி கொள்கிறது - அக்கட்சி இதுவரை பெற்ற அதிகபட்ச எண்ணிக்கையான 127 இடங்களுக்கு அதிகமாக - வென்று, காங்கிரசை வீழ்த்தி உள்ளது. இந்திரா காந்தியின் படுகொலையால் உருவான அனுதாப அலையின் பின்னணியில் 1985-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 149 இடங்களைப் பெற்று சாதனை படைத்தது.

2017-ல் இருந்ததைப் போல இல்லாமல், அன்றைய பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்த கோபம் மற்றும் வலுவான பட்டிதார் சமூகத்தின் போராட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் ஒரு பெரிய பிரச்சாரத்தையும் உத்தியையும் ஆரம்பித்தபோது, காங்கிரசுக்கு அதை சமாளிக்க பெரிய வெகுஜன இயக்கம் எதுவும் இல்லை. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக வலுவான அலை இருந்தது. தொண்டர்கள் இடையே மனநிறைவும் சோர்வும் ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸின் முழு ஆதிக்கத்தின் சிதைவு, மாற்றத்திற்கான ஏக்கம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) வேகம், கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றைக் குறித்து கவலையடைந்தது. இந்த கருத்துக் கணிப்பு விளையாட்டில் பா.ஜ.க திறமையானது என்பதை நிரூபித்துள்ளது. பா.ஜ.க தலைமை சில மாதங்களுக்கு முன்பே தேர்தலுக்கு தயாராக துரிதப்படுத்தியது. தலைமை அமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொண்டது. முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் முதல் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரையும் மாற்றியது.

குஜராத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க அமைப்பின் வலிமையின் ஒரு அளவுகோலாக இருக்கும் என்றும், இதுவரை தோற்கடிக்க முடியாத தேர்தல் வெற்றி இயந்திரமாகவும் உத்திகளின் செயல்திறன் மற்றும் அதன் தலைமையின் நீடித்த புகழ் ஆகியவற்றின் அளவுகோலாக இருக்கும் என்று பா.ஜ.க தலைமை மதிப்பிட்டுள்ளது.

“மக்கள் கவர்ச்சி இல்லாத மாநிலத் தலைமையால் ஆட்சிக்கு எதிரான மனநிலை கூர்மையடைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அமைச்சரவையை முழுமையாக மாற்றி, பூபேந்திர பட்டேலை முதல்வராக்கியது. 2017 தேர்தலுக்கு சற்று முன்னதாக ஆனந்திபென் படேலிடம் இருந்து ஆட்சியைப் பிடித்த விஜய் ரூபானி தனக்கான இடத்தை அடைய போராடினார். அவரால், தலைமையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை அவரை பதவி நீக்கம் செய்ய தலைமை சிரத்தை எடுக்கவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தான் நீக்கப்படும் கடைசி நிமிடம் வரை மர்மமாக இருந்ததாக ரூபானி கூறினார். சி.ஆர். பாட்டீல் ஜூலை 2020-ல் முக்கியமான உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, ஜாதி வாரியாகப் பட்டேலான ஜிது வகானிக்குப் பதிலாக மாநிலப் பிரிவின் தலைவராகக் கொண்டுவரப்பட்டார். பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளராக பிகுபாய் தல்சானியாவை ரத்னாகர் மாற்றுவது போன்ற முக்கிய மாற்றங்கள் அமைப்பில் இருந்தன. தல்சானியா பீகார் பிரிவின் பொதுச் செயலாளராக (அமைப்பு) நியமிக்கப்பட்டார்.

பா.ஜ.க வேட்பாளர் தேர்விலும் கறாராக இரக்கமில்லாமல நடந்துகொண்டது. பா.ஜ.க உற்சாகமில்லாத சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றியது - பா.ஜ.க 41 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை சமாளிக்க புதிய முகங்களை அறிமுகப்படுத்தியது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுடன் தனது தொடர்பைப் புதுப்பிப்பதற்காக பிரதமர் மோடி நேரடிப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக குஜராத்தில் பூத் கமிட்டி அளவிலான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பூத் கமிட்டி நிர்வாகிகளின் கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். பிரச்சாரத்தின் முன்னேற்றத்தை நெருக்கமாக மதிப்பாய்வு செய்தார்.

“தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அறிய விரும்பினார். அவர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது, விளம்பரப் பொருட்கள் - எல்லாவற்றையும் விரிவாக மதிப்பாய்வு செய்தார். அவரது சந்திப்புகள் அதிகாலை வரை மணிக்கணக்கில் நடக்கும்” என்று குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.

குறிப்பிட்ட சமூக நலன் என்பது பா.ஜ.க இந்த முறை மிகவும் தீவிரமாக அறிமுகப்படுத்திய மற்றொரு உத்தி என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் அனைத்து உயர்மட்ட மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களை குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பியது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். பா.ஜ.க-வின் அனைத்து தலைவர்களும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட நாட்களில் தீவிர பிரச்சாரத்தில் ‘கார்பெட் பாம்பிங்’ பிரச்சார உத்தியை மேற்கொண்டது.

பா.ஜ.க-வின் உத்திகள் - சாதனை வெற்றியை இலக்காகக் கொண்டு பணியாற்றியதாக போக்குகள் குறிப்பிடுகின்றன. 2017-ல், பா.ஜ.க வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 2012-ல் இருந்த 115 இடங்களில் இருந்து 99 ஆகக் குறைந்தது (பின்னர் அது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சேர்த்துக்கொண்டு அதன் எம்.எல்.ஏ எண்ணிக்கையை 111 ஆக உயர்த்தியது). 1995-ல் இருந்து பா.ஜ.க-வின் மிகக்குறைவான எண்ணிக்கை 99 ஆக இருந்தபோதிலும், அம்மாநிலத்தில் பா.ஜ.க-வின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது - 2002-ல் 127 இடங்களையும், 2007-ல் 117 இடங்களையும் பெற்றது. இருப்பினும், அதன் வாக்குகள் எப்போதும் 50 சதவீதத்தை ஒட்டியே இருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment