2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 195 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் மக்களை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சியிகள் தங்கள் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பா.ஜ.க ஒரு படி மேலே சென்று முதல் கட்சியாக 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடடுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க : BJP releases 1st list of 195 candidates for Lok Sabha polls, PM Modi to contest from Varanasi again
இதில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் தலைவர் காந்திநகரிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மீனாட்சி லேகிக்கு பதிலாக புதுதில்லியில் இருந்து மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் மகள் பாசுரி ஸ்வராஜ் போட்டியிடுகிறார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியிலும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் டெப் திரிபுரா மேற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ் ஆல்வார் தொகுதியிலும், கஜேந்திர ஷெகாவத் ஜோத்பூர் தொகுதியிலும் ராஜஸ்தானில் போட்டியிடுகின்றனர்.
திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் அட்டிங்கலில் வி முரளீதரன் ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்கள் கேரளாவில் போட்டியிடுகின்றனர் .குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பா.ஜ.க தலா 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதேபோல் கேரளாவில் 12, அசாம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11, தெலுங்கானாவில் 9, டெல்லியில் 5, உத்தரகாண்டில் 3, ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா 2, மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டாமன் & டையூவில் தலா ஒரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள 195 வேட்பாளர்கள் பட்டியலில் 28 பெண்கள், 47 இளைஞர்கள், 27 பட்டியல் சமூகத்தினர், 18 பட்டியல் பழங்குடியினர் மற்றும் 57 ஓபிசி வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாரத்தான் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் வியாழக்கிழமை கூடிய மத்திய தேர்தல் குழு (சிஇசி) வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.
முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதிக்கத்தை அதிகரிக்க கட்சி முயற்சித்து வருகிறது. பா.ஜ.க மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள மக்களும் கூட மீண்டும் மோடி அரசு வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார். பா.ஜ.க தனது கட்சிக்கு 370 தொகுதிகளையும், கூட்டணி கட்சியுடன் சேர்த்து 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணையித்துள்ளது.
பா.ஜ.க ஏற்கனவே சிறிய கட்சிகள் மற்றும் கர்நாடகாவில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) போன்ற பிராந்திய அமைப்புகளுடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளது, பீகாரில் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான ஜனதா தளத்தை (ஐக்கிய) மீண்டும் இணைத்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள டிடிபி-ஜனசேனா போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனிடையே இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பா.ஜ.க அதிக இடங்களை வென்று வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தென் மாநிலங்களில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக 100 சதவிகிதம் அடித்ததோடு, மத்தியப் பிரதேசத்தில் ஒரு இடத்தையும், சத்தீஸ்கரில் இரண்டு இடத்தையும் இழந்தது மற்றும் 2019 தேர்தலில் பீகாரில் அதன் கூட்டணி ஒரு இடத்தை இழந்தது.
கட்சி தனது முதல் பட்டியலை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதன் இரண்டு சிட்டிங் எம்.பி.க்களான ஜெயந்த் சின்ஹா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தனது தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தனது முயற்சிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக சின்ஹா கூறியுள்ளார். அதேபோல் கம்பீர் வரவிருக்கும் கிரிக்கெட் பணிகளில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்தார். இதன் காரணமாக இந்த இரண்டு எம்.பி.க்களும் அந்தந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிடமாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“