சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்த புதிய சட்டம் வேண்டும் : பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ்

Regulate Social Media : சமூக ஊடகங்களை ஓழுங்குப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்பட வேணடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

BJP Senior Leader Ram Madhav Said Regulate Social Media : சமூக ஊடகங்கள் தற்போது ஆட்சியை கவிழ்க்ககூட்டிய அளவிற்கு சக்தியவாய்ந்த ஆயுதமாக மாறிவிட்டது. இதனை ஓழுங்குப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்பட வேணடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

தான் எழுதிய ‘ஏனெனில் இந்தியா முதலில் வருகிறது’ (‘Because India Comes First’) என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர்,  “அரசியல் சார்நத” மற்றும் “அரசு சாரா” சக்திகளின் எழுச்சியுடன் ஜனநாயகம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் சமூக ஊடகங்கள் அரசாங்கங்களை கவிழ்க்கக் கூடிய அளவிற்கு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறிவிட்டன. தற்போது ஊடங்கங்கள் நல்லதை கற்பிப்பதை விட அராஜகத்திற்கு வழிவகுக்கும் செயல்களுக்குகே அதிகம் உதவுகிறது. இதனால் நாட்டில் ஜனநாயகம் பலவனமாகியுள்ள நிலையில், இதே நிலை நீடித்தால், அது நாட்டில், ஜனநாயகத்தை கானாமல் செய்துவிடும்.  அந்த நிலை வராமல் தடுப்பதற்கும், இதனை சமாளிப்பதற்கு, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தவும், அதன் மூலம் பரவும் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை சமாளிக்கவும், நிர்வகிக்கவும் நமக்கு புதிய விதிகள் மற்றும் புதிய சட்டங்கள் தேவைப்படுகிறது. இதில் அரசு ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மைக்ரோ-பிளாக்கிங் தளத்தை இந்திய சட்டத்தை பின்பற்றும்படி கேட்டுக்கொண்டது தொடர்பாக அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துவரும் தற்போது மாதவ் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

நாட்டிற்கு எதிரான கருத்துக்களை நீக்கவும், கருத்துக்களை பதிவிடும் நிலையை ஒழுங்குபடுத்தவும், ஒரு சட்டத்தை உருவாக்க கோரி ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் ட்விட்டர் இந்திய நிறுவனம், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ஊக்குவித்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாதவ், தனது புத்தகத்தில் தனது பார்வையில் மோடி அரசாங்கத்தின் பல முடிவுகள் குறித்து எழுதியுள்ளார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்தவொரு தலைவரின் பங்களிப்பையும் ஆர்எஸ்எஸ் குறைத்து மதிப்பிடாது. காந்தி ஒரு சிறந்த தலைவராக இருந்தார், அவரது அகிம்சை என்ற மந்திரத்தை பல உலகளாவிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை நேருவுக்கும் காந்திக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில் கூட காணப்படுகின்றன. இதனால் நாங்கள் ஒரு தேசியத் தலைவரை மதிக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆர்.எஸ்.எஸ் பிரார்த்தனையில், மற்ற தலைவர்களுடன் காந்தியின் பெயரும் உள்ளது, ”என்று மாதவ் கூறினார்.

தொடர்ந்து காஷ்மீரில், 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பாக பேசிய அவர், இந்த பிரிவை ரத்து செய்வதன் மூலம், காஷ்மீரில் வசிக்கும் 1.3 பில்லியன் மக்கள், வலுவான இந்திய குடும்பத்தின் ஒரு அங்கம் என்று உணர வைத்துள்ளது. இது நாட்டின் மக்களின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் “காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள். விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு சிறிது நேரம் ஆகலாம், என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp senior leader said govt working on law to regulate social media

Next Story
அமரீந்தர் சிங் நேர்காணல்: விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் ஆயுத ஊடுருவல் அதிகரித்தது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com