அரசியல் சூழ்நிலையில் என்.ஆர்.சி-ஐ பெரிதுபடுத்தி பேச பாஜக தயக்கம்

என்.ஆர்.சி பற்றி பேசாமல், நான்கு மாதங்களுக்குள் அயோத்தியில் வானளவு உயரமான கோயில் கட்டப்படும் என்று கூறி ராம் கோயிலின் சுருதியை உயர்த்தினார்.

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருவதால், ​​ஆளும் பாஜக  முன்மொழியப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு(என்.ஆர்.சி) தொடர்பான  கருத்துக்களை சற்று குறைக்க ஆர்மித்திருக்கிறது.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் குடியுரிமை திருத்தம் சட்டத்தை வைத்து நாட்டு மக்களிடையே ஒரு அச்சமான சூழ்நிலையை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.  மேலும் சட்டத்தின் “விதிகள்” குறித்து நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் பிரச்சாரங்களின் போது என்.ஆர்.சி செயல்முறை படுத்துவோம் என்று  ஆக்ரோஷமாக பேசிய  பாஜகவின் தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பிரச்சாரத்தில்  தனது தொனியை மாற்றியுள்ளார். கடந்த டிசம்பர் 2ம் தேதி மேற்கு சிங்பூமில் நடந்த பேரணியில் மட்டும் தான் அமித் ஷா  என்.ஆர்.சி செயல்முறையை பற்றி பேசினார்.

பரவலான ஆர்ப்பாட்டங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், பாஜக கட்சியும், அரசாங்கமும் குடியுரிமை திருத்தம் சட்டமும்  என்.ஆர்.சி செயல்முறையும் தனித்தனி பிரச்சினைகள் என்று சமிக்ஞை செய்ய விரும்புகின்றன.

முன்பு அமித் ஷா “காலவரிசையில் முன்பாகவே குடியரிமை திருத்தம் சட்டம் நிறைவேற்றிய பின்பு என்.ஆர்.சி செயல்படுத்தப்படும்” என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஆனால் பாஜகவில் குறைந்தது இரண்டு மூத்த தலைவர்கள் செவ்வாயன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம், என்.ஆர்.சி பிரச்சினையை முன்னிலைப்படுத்துவதை தற்போது  கட்சி விரும்பவில்லை என்றும், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் அல்லாத அகதிகள் மீது மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறது என்று கூறினார்.

இதற்கு பின்னணியில் ஒரு அரசியல் காரணமும் உள்ளது. என்.ஆர்.சி செயல்முறையில் பாஜகவின் கூட்டணி கட்சிகள்  தங்கள் அதிருப்தியை  வெளிப்படுத்தியுள்ளனர். ஜே.டி.யு மற்றும் எல்.ஜே.பி இருவரும் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு என்.ஆர்.சி பீகாரில் செயல்படுத்தப்படாது என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

 


லோக் ஜான்ஷக்தி கட்சி நடத்திய கூட்டத்தில், அதன் முக்கியத் தலைவர்கள் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், என்.ஆர்.சி செயல்முறையில் தங்களுக்குள்ள அச்சங்களையும் வெளிபடுத்தியதாக  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் சிஏபி பற்றிய விவாதத்திற்கு அமித் ஷா அளித்த உரையில், என்.ஆர்.சி நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்றும், ஒரு ஊடுருவாதிகளையும் விடமாட்டேன் என்றும் ஷா திட்டவட்டமாகக் கூறியிருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் பேசிய உரையில் என்.ஆர்.சி குறித்த எந்த கருத்தையும்  அவர் தெரிவிக்கவில்லை.

டிசம்பர் 2 ம் தேதி, ஜார்க்கண்டில் ஒரு தேர்தல் பேரணியில் உரையாற்றிய ஷா, “என்.ஆர்.சி.யை செயல்படுத்த வேண்டாம், ஊடுருவல்களை அனுப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கூறுகிறது. நாங்கள் முழு நாட்டிலும் என்.ஆர்.சி.யை செயல்படுத்துவோம், ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் 2024ம் ஆண்டிற்குள் நாட்டை விட்டு வெளியே அனுப்புவோம், ”

ஆனால் டிசம்பர் 14ம் தேதி கிரிடிஹ், தியோகர், மகாகமா போன்ற பகுதியில் நடந்த தேர்தல் பேரணியிலும், டிசம்பர் 16ம் தேதி பக்கூர் பகுதியில் பேசிய தனது தேர்தல் உரையிலும், அமித் ஷா என்.ஆர்.சியைக்  குறிப்பிடவில்லை. “நான்கு மாதங்களுக்குள், அயோத்தியில் வானளவு உயரமான கோயில் கட்டப்படும்” என்று கூறி ராம் கோயிலின் சுருதியை உயர்த்தினார்.

திங்களன்று, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு  எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், ஷா சிறுபான்மையினரிடையே அச்சங்களைத் தீர்க்க முயன்றார்.

“இந்த சட்டம் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதாகும், அது எந்தவொரு இந்தியரின் குடியுரிமையையும் பறிக்காது. சில கட்சிகள் வதந்திகளை பரப்பி, தங்கள் அரசியல் நலனுக்காக வன்முறையைத் தூண்டுகின்றன. மாணவர்கள் ஒரு முறை இந்த சட்டத்தை படித்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன், எதிர் கட்சிகளின்  வலையில் விழக்கூடாது, ”என்று ஷா கூறினார்.

செவ்வாயன்று, இந்தியா டுடே குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், என்.ஆர்.சி அமல்படுத்தப்படும்போது எந்தவொரு குடிமகனும், எந்த மதத்தை பின்தொடர்ந்தாலும் சரி  துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

என்.ஆர்.சி பயிற்சி தொடரும் போதெல்லாம், இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எந்த அநீதியும் செய்யப்பட மாட்டாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆனால் எந்த ஊடுருவலும் காப்பாற்றப்படாது, “ஷா கூறினார்.

இதற்கிடையில், பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி நட்டா கட்சி எம்.பி.க்கள் அனைவரும்  நாடு தழுவிய பிரச்சாரத்தில் பங்கேற்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து “துன்புறுத்தப்பட்ட லட்சக்கணக்கான சிறுபான்மையினர்” இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய குடிமக்களாக ஆவதற்கு தகுதி பெறுவார்கள் என்று சுட்டிக்காட்டிய நாடா,  ” பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அருகிலுள்ள அனைத்து சிறுபான்மையினரையும் தொடர்பு கொள்ளுங்கள். இந்த மசோதாவின் விதிகள் குறித்து அனைத்தையும் விவரியுங்கள்.  மாநாடுகள், அறிவுசார் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மூலம்  போன்றவை உள்ளனமக்களை தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் இது  எனது வேண்டுகோள்…..” என்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் என்.ஆர்.சி பற்றி எந்த குறிப்பும் இல்லை .

இந்த மாற்றத்தின் பின்னணியில் ஒரு அரசியல் சாணக்கியத்தனம்  இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. “குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக உருவான கூட்டம் நீண்ட காலம் நிக்காது. பாகிஸ்தான் முஸ்லிம்கள் இங்கு குடியேற இந்திய முஸ்லிம்கள் விரும்பவில்லை ”என்று பாஜக பொதுச் செயலாளர் பி முரளிதர் ராவ் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close