Advertisment

கர்நாடக தேர்தல்; ரூ.196 கோடி செலவழித்த பாஜக.. காங்கிரஸை விட 43% அதிகம்

2018 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட செலவின அறிக்கையின்படி, பாரதிய ஜனதா கட்சி ரூ.122.68 கோடி செலவிட்டு உள்ளது. நடப்பு தேர்தலில் காங்கிரஸ் செலவினமான ரூ.136.90 கோடியை விட 43% அதிகமாகும்.

author-image
WebDesk
New Update
BJP spent Rs 196 crore on Karnataka polls

மொத்த செலவு ரூ.196.70 கோடியில், பொதுக்கட்சி பிரசாரத்துக்கு ரூ.149.36 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவு ரூ.47.33 கோடியும் என பாஜக தெரிவித்துள்ளது.

congress-vs-bjp | இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜக ரூ.196.7 கோடி செலவிட்டுள்ளது. இது காங்கிரஸ் செலவினமான ரூ.136.90 கோடியை விட 43% அதிகமாகும் என்று தேர்தல் ஆணையத்திடம் கட்சிகளின் செலவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Advertisment

மொத்த செலவு ரூ.196.70 கோடியில், பொதுக்கட்சி பிரசாரத்துக்கு ரூ.149.36 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவு ரூ.47.33 கோடியும் என பாஜக அறிவித்தது. 

அச்சு, மின்னணு, இணையதளங்கள் மற்றும் டிவி சேனல்கள் போன்ற விளம்பரங்களுக்காக அக்கட்சி அதிகபட்சமாக 78.10 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

வியாழக்கிழமை (டிச.14) தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், டிவி சேனல்கள், செய்தித்தாள்கள், பேஸ்புக், கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கான விளம்பரங்களுக்கான கட்டண விவரங்களும் உள்ளன.

நட்சத்திரப் பிரச்சாரகர்கள் மற்றும் பிற தலைவர்களின் பயணச் செலவுகள் பாஜக மாநிலப் பிரிவால் ரூ. 37.64 கோடியும், தலைவர்களின் பயணத்திற்காக மத்திய அலுவலகம் ரூ.8.05 கோடியும் செலவிட்டுள்ளது.

மற்ற கட்சி வேட்பாளர்களின் குற்றச் செயல்களை விளம்பரப்படுத்தவும் கட்சி 2.93 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி

மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செலவின அறிக்கையின்படி, பொதுக் கட்சி பிரச்சாரத்திற்காக மொத்தம் ரூ.136.90 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.45.6 கோடியும் செலவிட்டுள்ளது.

2018 கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக 122.68 கோடி ரூபாயும், காங்கிரஸ் 34.48 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது. 2018 உடன் ஒப்பிடும்போது பாஜக இந்த முறை 60% அதிகமாக செலவழித்தது; காங்கிரஸின் செலவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 300% அதிகரித்துள்ளது.

மார்ச் 29 முதல் மே 15 வரை "கணிப்பிற்கு" கட்சித் தலைமையகம் ரூ. 5.90 லட்சம் செலவழித்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

ஆங்கிலத்தில் வாசிக்க : BJP spent Rs 196.7 crore on Karnataka polls, 43% more than Congress: report

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karnataka Congress Vs Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment