Advertisment

உ.பி., தேர்தலில் ஆச்சரியமளித்த பாஜக; அகிலேஷூக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேல் போட்டி

உத்திரபிரதேச தேர்தலில் பாஜக ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது, அகிலேஷுக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேலை களமிறக்குகிறது

author-image
WebDesk
New Update
உ.பி., தேர்தலில் ஆச்சரியமளித்த பாஜக; அகிலேஷூக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேல் போட்டி

Asad Rehman , Lalmani Verma 

Advertisment

BJP springs a surprise, fields MoS Baghel against Akhilesh: சமாஜ்வாதி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு மைன்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாளில், பாஜக அவருக்கு எதிராக மத்திய இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகேலை களமிறக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஆக்ரா எம்.பி.யாக உள்ள சத்ய பால் சிங் பாகேலும், திங்கள்கிழமை அகிலேஷ் தனது வேட்புமனுவை சமர்ப்பித்த சிறிது நேரத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இருப்பினும், அகிலேஷ் யாதவும், பாகேலும் தேர்தல் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. இருவரும் 2009 மக்களவைத் தேர்தலில் ஃபிரோசாபாத் தொகுதியில் போட்டியிட்டனர். அப்போது பாகேல் அகிலேஷிடம் தோற்றார்.

முன்னாள் போலீஸ் அதிகாரியான 61 வயதான பாகேல், சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் பாதுகாப்புக் குழுவில் இருந்தவர், மேலும் முலாயம் சிங் இளைஞர் படையின் தலைவராக 1992 இல் பதவியேற்றார். முலாயம் அவரை அரசியலில் அறிமுகப்படுத்தி 1998 மக்களவைத் தேர்தலில் ஜலேசரிலிருந்து அவரை நிறுத்தினார்.  பாகேல் 1999 மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் SP டிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.

எல்லை நிர்ணய நடவடிக்கையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதால், அவரை ஃபிரோசாபாத் தொகுதியில் நிறுத்த சமாஜ்வாதி கட்சி மறுத்து, அதற்கு பதிலாக அகிலேஷ் யாதவுக்கு டிக்கெட் கொடுத்தது. பாகேல் பின்னர் பிஎஸ்பியில் (பகுஜன் சமாஜ் கட்சி) இணைந்து 2009 மக்களவைத் தேர்தலில் ஃபிரோசாபாத் தொகுதியில் போட்டியிட்டார், அங்கு அவர் அகிலேஷ் யாதவால் தோற்கடிக்கப்பட்டார்.

ஒரு வருடம் கழித்து, பாகேல் பிஎஸ்பியால் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார் மற்றும் ஃபிரோசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட SP தலைவர் ராம் கோபால் யாதவின் மகன் அக்‌ஷய் யாதவிடம் தோற்றார். 2015 இல், பாஜக அவரை கட்சியின் OBC மோர்ச்சாவின் தேசியத் தலைவராக நியமித்தது.

2017 சட்டமன்றத் தேர்தலில், தங்கர் துணை ஜாதியைச் சேர்ந்த பாகேல் பட்டியல் சாதியினருக்கான தனித் தொகுதியான துண்ட்லா தொகுதியில் போட்டியிட்டு, பிஎஸ்பியின் ராகேஷ் பாபுவை தோற்கடித்தார். பின்னர் பாகேல், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனித் தொகுதியான ஆக்ராவிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் பாகேலுக்கு இராஜங்க அமைச்சர் (சட்டம் மற்றும் நீதி) பதவி வழங்கினார்.

இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விட "முன்னிலையில்" இருக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக கூறினார்.

சட்டசபை தேர்தலில் அகிலேஷ் போட்டியிடும் முதல் போட்டி இதுவாகும். 2012ல், அகிலேஷ் முதல்வராக பதவியேற்க, சட்ட மேலவை உறுப்பினர் பதவியை தேர்வு செய்தார். இந்த தேர்தல் நாட்டின் "வரலாற்றை" எழுதும் என்று கூறிய அகிலேஷ், "எதிர்மறை அரசியலை" தோற்கடிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Uttar Pradesh Assembly Elections 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment