/tamil-ie/media/media_files/uploads/2022/09/Sambit-Patra.jpg)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையின் கீழ், தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், “நூற்றுக்கணக்கான கோடி” மதிப்பிலான “கமிஷன்” பெற்றதாகக் கூறும் வகையில் பா.ஜ.க திங்கள்கிழமை ‘ஸ்டிங் வீடியோக்களை’ வெளியிட்டது.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கலால் கொள்கை ஊழலில் சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட 13 ஆவது நபரின் தந்தையைக் காட்டுவதாகக் கூறப்படும் இரண்டு வீடியோக்களை வெளியிட்டார். எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மணீஷ் சிசோடியாவும் ஒருவர். வீடியோவில் உள்ள நபர் "தங்கள் செயல்பாட்டின் முறைகளை விளக்குகிறார்" என்று பத்ரா கூறினார்.
இதையும் படியுங்கள்: எங்களுக்கு புரட்சி தேவை, முழு இடையூறு அல்ல; இலங்கை தூதர் மிலிந்த மொரகொட
குற்றம் சாட்டப்பட்ட 13 ஆவது நபர், சன்னி மர்வா, 'மகாதேவ் மதுபானங்களின் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்' என்று FIR இல் பட்டியலிடப்பட்டுள்ளார். சன்னி மர்வா "குற்றம் சாட்டப்பட்ட பொது ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்" என்று FIR கூறுகிறது.
“(இப்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை) கொள்கையால் மணீஷ் சிசோடியா நிறைய கமிஷன் மற்றும் பணத்தை சம்பாதித்துள்ளார். நாங்கள் அவர்களிடம் ஐந்து கேள்விகளைக் கேட்டிருந்தோம் - ஏன் பழைய கொள்கை, பின்னர் புதிய கொள்கை, பின்னர் ஏன் திரும்பப் பெறப்பட்டது; (முன்னாள் கலால் ஆணையர்) ரவி தவான் குழுவின் பரிந்துரைகள் ஏன் பின்பற்றப்படவில்லை; தடுப்புப்பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஏன் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன; கொள்கைக்கு மாறாக உற்பத்தியாளர்களுக்கு ஏன் சில்லறை ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன; ஏன் கமிஷன் (தனியார் நிறுவனங்களுக்கு) 2% லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டது, அதனால் கருவூலம் நஷ்டத்தை சந்தித்தது,” என்று பத்ரா கூறினார்.
பா.ஜ.க.,வின் கூற்றுக்கு டெல்லி அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை.
“இப்போது, ஸ்டிங் மாஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஊழல் நடந்தால் ஒருவர் அதனை ஸ்டிங் ஆபரேசன் மூலம் பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார். தற்போது ஸ்டிங் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது ஊழல்வாதிகளாக மாறியுள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது,” என்று பத்ரா கூறினார்.
இந்த ஸ்டிங் வீடியோ மணீஷ் சிசோடியாவிடம் பணத்தை ஒப்படைத்த நபர் சம்பந்தப்பட்டதாக பத்ரா கூறினார். வீடியோவில், குல்விந்தர் மர்வா (சன்னியின் தந்தை) 80% லாபம் எங்களுடையது, அதாவது ஒப்பந்தக்காரர்கள், கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவின் நண்பர்கள் என்று விளக்குகிறார். கருவூலத்திற்கு 10% மட்டுமே கிடைக்கிறது என்கிறார். ஒரு நிலையான தொகை வழங்கப்படும் வரை, அவர் விரும்பியவருக்கு எப்படி வேண்டுமானாலும் விற்கலாம் என்று சொல்லப்பட்டதாக அவர் கூறுகிறார், ”என்று பத்ரா கூறினார், இந்த ‘நிலையான தொகை’ ஆம் ஆத்மி தலைவர்களுக்குப் போகிறது என்று பத்ரா கூறுகிறார்.
இப்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை 2021-22ன் கீழ், உரிமக் கட்டணம் வசூலிக்கும் முறையை அரசாங்கம் மாற்றியுள்ளது. புதிய கொள்கையின்படி, பெரும்பாலான கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டது மற்றும் மது விற்பனையில் VAT ஆக 1% மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஊழலுக்கான ஊக்கத்தொகையை அகற்றுவது அரசாங்கத்தின் யோசனையாக இருந்தது, ஏனெனில் கட்டணத்தின் பெரும்பகுதி முன்கூட்டியே செலுத்தப்பட்டது.
“அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வாடகை குறைவாக இருப்பதால் கடைகளைத் தொடங்க விரும்புகிறோம் என்று அவர் (குல்விந்தர்) கூறினார். அவர்கள் (அரசு) கடைகளுக்கு ரூ.250 கோடி முதல் ரூ.500 கோடி வரை எடுத்தார்கள். இந்தப் பணம் அரசு கருவூலத்துக்குச் சென்றதா? அவர் (குல்விந்தர்) இல்லை என்றார். அவர் சுமார் ரூ.60 கோடி கொடுத்தாக கூறுகிறார்; சிலர் 150 கோடி வரை கொடுத்துள்ளனர். இந்த பணம் மணீஷ் சிசோடியாவின் கணக்கில் செல்கிறது என்று அர்த்தம்” என்று பத்ரா குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.