scorecardresearch

’லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் பயங்கரவாதத்தை’ தடுக்க சட்டம் வேண்டும்; மத்திய அரசை வலியுறுத்தும் கேரள பாஜக

BJP urges Centre to bring a law to deal with ‘narco-terrorism’, ‘love jihad’: ’லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் பயங்கரவாதத்தை’ ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; கேரள பாஜக குற்றச்சாட்டு

’லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் பயங்கரவாதத்தை’ தடுக்க சட்டம் வேண்டும்; மத்திய அரசை வலியுறுத்தும் கேரள பாஜக

“போதைப்பொருள் ஜிஹாத்” என்ற கேரள கத்தோலிக்க பிஷப்பின் கூற்று அரசியல் ஃப்ளாஷ் பாயிண்டாக மாறியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தின் குரலை எதிரொலிப்பதாகவும், “போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் லவ் ஜிஹாத்தை சமாளிக்க ஒரு சட்டத்தை கொண்டு வர மத்திய அரசின் தலையீட்டை கோரியதாகவும் கேரள பாஜக ஞாயிற்றுக்கிழமை கூறியது.

இதற்கிடையில், “ஜிஹாதி நடவடிக்கைகளைத் தடுக்கவும் மற்றும் பாளை பிஷப் ஜோசப் கல்லரங்கட் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்கவும்” மத்திய அரசின் தலையீட்டைக் கோரி பாஜகவின் கேரள பிரிவு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியது.

ஒரு அறிக்கையில், பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன், “கேரளாவின் பாளை பிஷப் ஜோசப் கல்லரங்கட்டின் தலையீடு, புனித வழிபாட்டின் போது அவரது மறைமாவட்டங்களுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பு மட்டுமல்ல, லவ் ஜிஹாத் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்தின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரல். லவ் ஜிகாத் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

புலனாய்வு அமைப்புகளிடமிருந்து தகவல்கள் வந்தாலும் கேரளா அரசு போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் லவ் ஜிகாத் பற்றி அறியவில்லை என்று டாம் வடக்கன் குற்றம் சாட்டினார். பல்வேறு தேவாலயங்களின் பக்தர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து பிஷப் கவுன்சில் இந்த பிரச்சினையை எழுப்பியதாக அவர் கூறினார், இளம் பெண்கள் கவர்ந்திழுக்கப்பட்டு “லவ் ஜிஹாத்க்கு” இரையாகிறார்கள்,  “பின்னர் வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். “இது மனித கடத்தலாக கருதப்பட வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

“பல்வேறு சமூகங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் குடும்பங்களுக்குள் அமைதியை பாதித்துள்ளது மற்றும் பேரழிவு அளவுகளில் சமூக-பொருளாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளது” என்று டாம் வடக்கன் கூறினார். “மத்திய அரசுக்கு எனது வேண்டுகோள், இதுபோன்ற பிரச்சனைகளை பதிவு செய்ய மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும், மேலும் போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் லவ் ஜிஹாத்தை சமாளிக்க விரைவு நீதிமன்றங்களை கொண்டு வர வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவரும், தற்போதைய கேரள பாஜக பொதுச் செயலாளருமான ஜார்ஜ் குரியன், கேரளாவில் “ஜிஹாதி கூறுகள்” சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸின் முழு ஆதரவைப் பெறுகின்றன. “பல ஜிஹாதிகள் சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸின் தீவிரத் தொழிலாளர்கள். இது நிலைமையை கொந்தளிப்பாக மாற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு கேரளாவில் உள்ள பிஷப் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன், என்று அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிஷப்பின் அறிக்கையின் எதிர்வினை, கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களிடையே “பாதுகாப்பின்மை” யின் பிரதிபலிப்பாகும் என்றும் குரியன் கூறினார்.

பிஷப் கல்லரங்கட் வியாழக்கிழமை ஒரு சர்ச்சையைத் தூண்டினார், கேரளாவில் கிறிஸ்தவப் பெண்கள் பெரும்பாலும் “காதல் மற்றும் போதைப்பொருள் ஜிஹாத்” க்கு பலியாகிறார்கள், மேலும் ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத இடங்களில், தீவிரவாதிகள் மற்ற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை அழிக்க இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

இந்த அறிக்கை மாநிலத்தில் ஒரு சர்ச்சையைத் தூண்டியது, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூகங்களின் பொது ஆர்ப்பாட்டங்கள், சூழலை சமூக ரீதியாக பாதிக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த கருத்துக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. முதல்வர் பினராயி விஜயன் போதைப்பொருளுக்கு மத நிறத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார், எதிர்க்கட்சி தலைவர் விடி சதீசன், பிஷப்பின் கருத்துக்கள் மீது வகுப்புவாத பதற்றத்தை தூண்ட முயல்கிறது என சங் பரிவாரத்தை குற்றம் சாட்டினார்.

பிஷப்பிற்கு ஆதரவு அளித்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான வி.முரளீதரன், முன்பே கேரள சமூகத்தின் கவலைகளை எழுப்பியதாகவும், அவரைத் தாக்குவதால் அமைதியாக இருக்க முடியாது என்றும் கூறினார்.

ஒரு அறிக்கையில், கேரள கத்தோலிக்க ஆயர்கள் கவுன்சில் (KCBC), பிஷப் கல்லரங்கட்டின் வார்த்தைகள் எந்த சமூகத்தையும் இலக்காகக் கொள்ளவில்லை என்றும் அவர் சமூகத்தின் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார் என்றும் கூறியுள்ளது. இது சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது, மாறாக தீவிரத்துடன் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 19 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவ சமூகத்தை இணைத்து கேரளாவில் தனது தேர்தல் தளத்தை விரிவுபடுத்துவதற்காக பிஜேபி முயற்சி செய்து வருகிறது. கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, “லவ்-ஜிஹாத்” என்று கூறப்படும் பிரச்சினையை பாஜக எடுத்துக்கொண்டது. காதல் போர்வையில் இந்து பெண்களை மதமாற்றம் செய்ய முஸ்லீம் ஆண்கள் கட்டாயப்படுத்திய பிரச்சாரத்தை, கிறிஸ்தவ ஆதிக்கம் உள்ள பகுதிகளில் சில தேவாலயத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்திய பிறகு வலதுசாரி ஆர்வலர்கள் தீவிரமாக பயன்படுத்துகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் “லவ் ஜிஹாத்” அடங்கிய சிறப்புச் சட்டம் கொண்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் பிஜேபி பொதுச் செயலாளர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி அமைப்பதில் “கடினத்தன்மையை” கைவிடுமாறு கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார், மேலும் கேரளாவில் கிறிஸ்துவ சமூகத்துடன் பிஜேபி சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கிறிஸ்தவ சமூகங்கள் பாஜகவுடன் கைகோர்ப்பதில் பெரிய பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்திலுள்ள தேவாலயத் தலைவர்களுடனும் பிரதமர் சந்திப்புகளை நடத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp takes up kerala bishops narcotics jihad remark wants centre to bring in a law to deal with it

Best of Express