Advertisment

‘70 ஆண்டுகளில் ரூ.48,20,69,00,00,000 கொள்ளை: காங்கிரஸ் ‘ஊழலை’ குறிவைத்து பா.ஜ.க வீடியோ பிரச்சாரம்

ஆளும் கட்சி பா.ஜ.க, ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற பெயரில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிடுகிறது. அடுத்தது: பிரியங்கா காந்திக்கு எதிராக முன்னாள் வங்கியாளர் ராணா கபூரின் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறது.

author-image
WebDesk
New Update
Congress Files, Congress corruption allegations, BJP video series Congress Files, Corruption and scams during Congress rule, BJP accuses Congress of looting public money, Coal scam, 2G spectrum scam, MNREGA scam, Commonwealth scam, BJP, காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கோப்புகள், பாஜக வீடியோ பிரச்சாரம், Congress, corruption scams, video series, allegations, public money, INS Vikrant, Rafale jets, Mangal Mission, development, progress, Manmohan Singh, coal scam, 2G spectrum scam, MNREGA scam, Commonwealth scam, bribery, Rana Kapoor, Priyanka Gandhi Vadra, Enforcement Directorate, money laundering, Sonia Gandhi, political vendetta

காங்கிரஸ் ‘ஊழலை’ குறிவைத்து பா.ஜ.க வீடியோ பிரச்சாரம்

ஆளும் கட்சி பா.ஜ.க, ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற பெயரில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிடுகிறது. அடுத்தது: பிரியங்கா காந்திக்கு எதிராக முன்னாள் வங்கியாளர் ராணா கபூரின் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறது.

Advertisment

காங்கிரஸ் மீது புதிய விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ள, பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற தலைப்பில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிட்டது. அதில் பழமையான மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது ஊழல்களும் மோசடிகளும் பரவலாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சில காங்கிரஸ் ஆதரவாளர்களும், அதனுடன் இணைந்த அமைப்புகளின் ட்விட்டர் கணக்குகளும் பா.ஜ.க-வைத் தாக்கிய போதிலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைமை இந்த வீடியோவுக்கு பதிலளிக்கவில்லை.

இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ கணக்கில் ட்வீட் செய்த பா.ஜ.க, “காங்கிரஸ் கோப்புகளின் முதல் எபிசோடில், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்களும் மோசடிகளும் ஒன்றன் பின் ஒன்றாக எப்படி நடந்தன என்பதைப் பாருங்கள்…” என்று கூறியுள்ளது.

‘காங்கிரஸ் என்றால் ஊழல்’ என்ற பெயரில் 184 வினாடிகள் கொண்ட வீடியோவின் முதல் பாகத்தில், “காங்கிரஸ் தனது 70 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்களிடமிருந்து ரூ.48,20,69,00,00,000 கொள்ளையடித்துள்ளது. அந்தப் பணம் இருந்திருந்தால், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் பல பயனுள்ள பகுதிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.” என்று ஆளும் பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

24 ஐஎன்எஸ் விக்ராந்த்ஸ், 300 ரஃபேல் ஜெட் விமானங்கள் மற்றும் 1,000 மங்கல் மிஷன்களை அந்தப் பணத்தில் வாங்கியிருக்கலாம் அல்லது நிதியுதவி செய்திருக்கலாம் என்று கூறிய ஆளும் பா.ஜ.க, காங்கிரஸின் ஊழல் காரணமாக, நாடு முன்னேற்றப் பாதையில் பின்தங்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸின் ஆட்சிக் காலத்தை ‘தோல்வி தசாப்தம்’ என்று பா.ஜ.க வர்ணித்தது - பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது உரையின் போது பயன்படுத்திய வாசகம் - முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அவரது ஆட்சியில் தொடர்ந்து நடந்த ஊழலைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு பார்வையற்றவராக இருந்தார் என்று பா.ஜ.க சாடியது.

மேலும், “அந்த நாட்களில், ஊழலைப் பற்றிய செய்திகளால் செய்தித்தாள்களின் நிரப்பப்பட்டன. அதைப் பார்த்து ஒவ்வொரு இந்தியனின் தலைகளும் வெட்கத்தால் தலை குணிந்தன. இதில் ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல், ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி அலைக்கற்றை ஊழல், ரூ.10 லட்சம் கோடி எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ ஊழல், ரூ.70,000 கோடி காமன்வெல்த் ஊழல், இத்தாலியுடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ரூ.362 கோடி லஞ்சம், ரயில்வே வாரியத் தலைவருக்கு 12 கோடி லஞ்சம் ஆகியவை அடங்கும்.” என்று பா.ஜ.க கூறியது.

“இது காங்கிரஸின் ஊழலின் டிரெய்லர் மட்டுமே, திரைப்படம் இன்னும் முடிவடையவில்லை” என்று பா.ஜ.க இந்த வீடியோவின் முடிவில் கூறுகிறது. அடுத்த பாகத்தின் உள்ளடக்கத்தை யெஸ் வங்கியில் கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவிடம் இருந்து எம்.எஃப் ஹுசைன் ஓவியத்தை வாங்குவதற்கு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக நிறுவனர் ராணா கபூரின் குற்றச்சாட்டு இடம்பெறுகிறது. பணமோசடி வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், அமலாக்க இயக்குனரகம் கூறியது, இந்த விற்பனையில் கிடைத்த வருமானத்தை காந்தி குடும்பத்தினர் நியூயார்க்கில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தியதாக அமலாக்க இயக்குனரகத்திடம் ராணா கபூர் கூறினார்.

கபூருக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையிலான பரிவர்த்தனையை காங்கிரஸ் மறுக்கவில்லை. மேலும், பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் “மக்களை பயமுறுத்துவதற்கும், அரசியல் பழிவாங்குவதற்கும் பயம் என்கிற மனநோயை உருவாக்க முயற்சிப்பதாக” குற்றம் சாட்டியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment