scorecardresearch

2024 தேர்தல் வியூகம்; சாதிக் கட்சிகளுடன் கூட்டணி: 3 நாள் ஆலோசனையில் உ.பி பா.ஜ.க தலைவர்களுக்கு அட்வைஸ்

2024 மக்களவை தேர்தலில் கவனம் செலுத்திங்கள் என்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பாஜக மாநில அளவிலான பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 தேர்தல் வியூகம்; சாதிக் கட்சிகளுடன் கூட்டணி: 3 நாள் ஆலோசனையில் உ.பி பா.ஜ.க தலைவர்களுக்கு அட்வைஸ்

2024 மக்களவை தேர்தலில் கவனம் செலுத்திங்கள் என்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பாஜக மாநில அளவிலான பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சித்ரகூட் என்ற வழிபாட்டுதளத்தில், பாஜகவின் மாநில அளவில் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில், மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு எப்படி எடுத்து செல்வது என்பது தொடர்பாக விவரிக்கப்பட்டது. மேலும் ஜாதி கட்சிகளுடனான கூட்டணியில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறு கட்சிகளுடனான கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

2019-உத்தரபிரதேச தேர்தலில் பாஜக கட்சியினர் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 64 லோக் சபா இடங்களை வென்றனர். ஆனால் 2014-ல் 73 இடங்களை இதே தேர்தலில் பாஜக கூட்டணி வென்றது. இது ஒரு பின்னடைவாகவே பாஜகவால் பார்க்கப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்த பெரும்பானையை சென்ற மக்களவை தேர்தலில் பெற்றாலும், கடந்த முறை தனிப்பெரும்பான்மையாக 312 இடங்களை பாஜ பெற்றது குறிப்பிடதக்கது என்பதால் இதை பாஜக ஒரு வீழ்ச்சியாக பார்க்கிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, கூறுகையில், “கட்சியின் அரசியல் கொள்கையில் பாஜக நிர்வாகிகள் உறுதியாக இருக்க வேண்டும். மேலும் அதீத நம்பிக்கையால் தவறுகள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டி கால மோடி ஆட்சியை, காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்புமைப்படுத்தி மக்களுக்கு, கட்சியினர் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகி கூறுகையில் “ இது போன்ற பயிற்சி பட்டறைகள்  மாவட்ட அளவில் நடைபெறும். ஆனால் மாநில அளவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. உத்தரபிரதேசத்தின் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசு நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி வகுப்பானது, பாஜகவின் எதிர்கால செயல்பாடுகள் குறித்த ஒரு விரிவான பார்வையை எங்களுக்கு வழங்கி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மோடி அரசின் புந்தேல்கண்ட்  சாலைத் திட்டம், குடிதண்ணீர் திட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளை புகழ்ந்து பேசினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp tells its up leaders at 3 day training camp