Parimal A Dabhi
BJP to start sports league named after Article 370 : பாஜகவில் அதிக அளவு இளைஞர்களை இணைக்கும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சரின் தொகுதியான குஜராத்தின் காந்தி நகரில் பாஜக காந்திநகர் லோக்சபா ப்ரீமியர் லீக் 370 அல்லது ஜி.எல்.பி.எல். 370 என்ற பெயரில் கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது என்று கட்சியினர் கூறியுள்ளனர்.
அகமதாபாத் நகர பாஜக பிரிவு பொதுச்செயலாளர் ஜிதுபாய் படேல், இந்த ப்ரீமியர் லீக் அமித் ஷாவின் தலைமையில் ரத்து செய்யப்பட்ட இந்திய சாசன பிரிவு 370-ன் பெயரில் நடத்தப்படுகிறது என்று கூறினார். இந்த போட்டிகள் டிசம்பர் மாத மத்தியில் நடைபெற உள்ளது.
காந்திநகர் மக்களவைத் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக இருக்கும் ஹர்ஷத் படேல் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள (இளம்) வாக்காளர்களை பாஜகவுக்கு ஆதரவாக மாற்றுவதற்காக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்காக கிரிக்கெட், கபடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது இரண்டு அணிகள் (கிரிக்கெட் மற்றும் கபடிக்கு தலா ஒன்று) இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலில் எங்களில் 8 முதல் 10 நபர்களிடம் இந்த யோசனைப் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். பிறகு 200-250 கட்சித் தொண்டர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
உதாரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கர்நாவதி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகளை நடத்திய இணை அமைச்சர் ஜெகதீஷ் விஸ்வகர்மாவிடம் போட்டிகளை திட்டமிடும்படி தற்போது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு கே.பி.எல். எனப்படும் அப்போட்டிகளை அமித் ஷா ஆரம்பித்து வைத்தார்.
இந்த தொகுதியின் முழுக்குழுவும் இடம் பெற்றுள்ளது. முழு தொகுதிக்குமான கபடி போட்டி தொடரையும் 7 கிரிக்கெட் போட்டி தொடர்களை 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அணிகளின் பதிவு நடைபெற்று வருகிறது என்றும் பாஜக மாநில பிரிவு பொதுச்செயலாளர் ப்ரதிப்சின் வகேலா கூறினார்.
வெஜால்பூர், காட்லோடியா, நரன்பூரா, சபர்மதி, கலோல், காந்திநகர் மற்றும் சனந்த் போன்றவை இந்த மக்களவை தொகுதியின் கீழ் வரும் சட்டமன்ற தொகுதிகள் ஆகும். அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மொத்தமாக 1800 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு அணிகள், இடங்கள் மற்றும் வர்ணனையாளர்களை அடையாளம் காண்பது முதல் விதிகளை உருவாக்குவது வரை பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆண்களுக்கு மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. டென்னிஸ் பந்துகளைக் கொண்டு கிரிக்கெட் போட்டிகல் நடைபெறும். தனியார் உரிமையாளர்களிடம் இருந்து மைதானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்படும் என்று பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர். போட்டிக்கான விளம்பரம் முக்கியமாக வார்டு அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் செய்யப்படுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
2007ம் ஆண்டு முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தொடர்பில் ஷா இருக்கிறார். மேலும் மாநில பிரிவில் காங்கிரஸ் தலைவர்களின் 16 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தார். அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைவராக இருந்தபோது ஷா ஜிசிஏவின் துணைத் தலைவராகவும் இருந்தார். ஷாவின் மகன் ஜெய் ஷா தற்போதைய பிசிசிஐ செயலாளராக உள்ளார்.
கேல் மஹாகும்ப் மூலம் வீரர்களை ஊக்குவிக்கும் நரேந்திரபாயின் கருத்தின் அடிப்படையில், அமித்பாய் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். இது அவரது வழிகாட்டுதல் மற்றும் உந்துதலால் செய்யப்படுகிறது. புதன் கிழமைக்குள், பதிவுசெய்யப்பட்ட முதல் அணிகளை அடயாளம் காணா இயலும் என்று அகமதாபாத் நகர பாஜக பொதுச்செயலாளர் ஜித்துபாய் படேல் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil