Advertisment

திரிபுரா தேர்தல்: ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க எதிர்கொள்ளும் சவால்கள்

8 எம்.எல்.ஏக்-கள் பாஜக - திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி ( ஐபிஎஃப்டி) கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
BJP tough challenge to retain power in Tripura amid emerging electoral alliances tamil news

Union Home Minister Amit Shah with Tripura Chief Minister Manik Saha and BJP MP Biplab Deb during a rally at Sabroom in South Tripura district. (PTI)

2023 Tripura Legislative Assembly election Tamil News: நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை ஆளும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சியான சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் திரிபுரா பழங்குடியினர் பகுதி தன்னாட்சி மாவட்ட கவுன்சிலை ஆளும் திப்ரா மோதா கட்சி ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டியாகத் தெரிகிறது.

Advertisment

சிபிஎம் மற்றும் காங்கிரஸும் தேர்தல் கூட்டணிக்கு உடன்பட்டுள்ளன. மேலும், திப்ரா மோதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்ததையில் ஈடுபட்டன. ஆனால், திப்ரா மோதா கட்சி இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட பழங்குடியின மாநிலமான 'கிரேட்டர் திப்ராலாந்து' என்ற அதன் முக்கிய கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் இல்லாமல் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெளிவு படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், திப்ரா மோதா, தற்போது ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணியை (IPFT ஐபிஎஃப்டி) இணைப்பதற்கான முன்மொழிவுடன் அணுகியுள்ளனர். மேலும், அக்கட்சியானது பேச்சுவார்த்தைக்கும் ஒப்புக்கொண்டுளளது.

2018 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, இடது முன்னணியை வீழ்த்தியதைக் கண்ட மாநிலம், அதன் பின்னர் அதன் அரசியல் அடிவானத்தில் சில மாற்றங்களைக் கண்டுள்ளது. பாஜக, பல லட்சிய அறிவிப்புகள் மற்றும் சமூக நலன்களை வெளியிட்டாலும், ஆளும்கட்சி சாதாரணமானது என்று கூறுகின்ற சில பதவிக்கு எதிரான நிலையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு அதன் "மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் அரசியல் வன்முறைகள்" காரணம் என்று கூறுகின்றன.

8 எம்எல்ஏக்கள் பாஜக - திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (IPFT - ஐபிஎஃப்டி) கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதில், 5 பேர் பாஜகவையும், 3 பேர் திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 8 பேரில் ஐபிஎஃப்டியில் இருந்து மூன்று பேர் மற்றும் பாஜகவில் இருந்து ஒருவர் என 4 பேர் திரிபுரா ஏடிசியின் ஆளும் திப்ரா மோதா கட்சிக்கும், மூன்று பேர் காங்கிரஸுக்கும், ஒருவர் திரிணாமுல் காங்கிரஸுக்கும் மாறியுள்ளனர்.

மாநிலத்தில் பாரம்பரிய பரம போட்டியாளர்களான சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பற்றி விவாதித்து வருகின்றன, இது ஆளும் பாஜவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளது. மேலும், இது "அசுத்தமான கூட்டணி" மற்றும் "வளர்ச்சிக்கு எதிரானது" என்றும் அக்கட்சிகளின் கூட்டணி குறித்து கூறியுள்ளது.

சமீபத்திய அரசியல் முன்னேற்றங்களில் முக்கியமானது, திப்ரா மோதா என்ற அரச வாரிசு பிரத்யோத் கிஷோர் மாணிக்ய டெபர்மா தலைமையிலான ஒரு கட்சி, முக்கியமாக கிரேட்டர் திப்ராலாந்திற்கான பழங்குடியினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கோரிக்கையை வளர்த்து வருகிறது. திப்ராலாந்து முழக்கம் முதன்முதலில் 2009ல் முன்னாள் ஐபிஎஃப்டி தலைவரான என்சி டெபர்மா -வால் எழுப்பப்பட்டது. இந்த முழக்கம் அக்கட்சியை 2018ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற உதவியது.

திரிபுராவின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 20 இடங்கள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாலும், பழங்குடியினர் மற்ற பல தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை கொண்டுள்ளனர் என்பதாலும், திப்ரா மோதா கட்சியுடன் கூட்டணி அமைக்க அனைத்து கட்சிகளும் விருப்பம் காட்டுகின்றன.

.இதனால் தான், மூத்த பிஜேபி தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட கடந்த ஆண்டு பிரத்யோத்தை (திரிபுரி அரச குடும்ப தலைவர் அல்லது பட்டத்து அரசர்) அழைத்திருந்தார்கள்; 1940 களில் அரச எதிர்ப்பு ஜன சிக்ஷா அந்தோலனில் இருந்து தனது அரசியலைத் தொடங்கிய சிபிஐஎம் கூட பிரத்யோத்தை அணுகி ஒரு கூட்டணியை உருவாக்க முன்மொழிந்தது.

தற்போதைக்கு, திப்ரா மோதா அதன் முக்கிய 'கிரேட்டர் திப்ராலாந்து' கோரிக்கைக்கு ஆதரவாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் இல்லாமல் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளது. அதோடு, பாஜக மீதான தாக்குதலை அக்கட்சி கூர்மைப்படுத்தியும் உள்ளது. பாஜக வகுப்புவாத அரசியல் செய்வதாகவும், டெல்லி அல்லது நாக்பூரிலிருந்து திரிபுராவுக்கு ஆணையிடுவதாகவும் கூறியுள்ளது.

சிபிஐஎம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பாஜகவை தோற்கடிப்பது மற்றும் "ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது" என்பதே அவர்களின் முக்கிய செயல்திட்டம் என்று கூறுகின்றன. இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் குறித்து இரு கட்சிகளும் திருப்தி தெரிவித்துள்ளன.

பாஜக தனது பக்கம், வளர்ச்சியை தனது முக்கிய நிகழ்ச்சியாகக் கடைப்பிடிக்கிறது. தனக்கு எதிரான கூட்டணியை அறிந்திருந்தாலும், அக்கட்சிக்கு வெற்றி 100 சதவீதம் உறுதி என்று கூறுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்றும், பாஜகவின் கண்காணிப்பில் அடையப்பட்ட 'மகத்தான வளர்ச்சி'யிலிருந்து மக்களைத் திசைதிருப்ப பொய்களைக் குவிப்பதாகவும் அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

"வெற்றியில் நாங்கள் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறோம். எங்களது முக்கியப் பிரச்சினை வளர்ச்சி. 1949ல் திரிபுரா இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை மாநிலம் கண்டது இதுவே முதல் முறை. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். வளர்ச்சியே எங்களின் பிரதான நிகழ்ச்சி நிரல். எதிர்க்கட்சி கூட்டணி வளர்ச்சிக்கு எதிரானது, நாங்கள் கவலைப்படவில்லை” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பழங்குடியினரின் "உயிர்வாழ்வு மற்றும் இருப்பு"க்காக இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் திப்ரா மோதாவின் முன்மொழிவுக்கு பிஜேபியின் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி பதிலளித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன, மேலும் "பொது நலன்களின் பரந்த அளவிலான பிரச்சினை" குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறியது.

திரிபுராவில் தனது ஒரே கூட்டணியை இழக்கும் வாய்ப்புகள் குறித்து, பாஜக வளர்ச்சியால் துவண்டுவிடவில்லை என்று கூறியது. "இந்த வகையான சதித்திட்டங்கள் இருந்தால், மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்றும் கூறியுள்ளார்.

2018ல், பிஜேபி வாக்குகள் 43.59 சதவீதமாக இருந்தது. இது சிபிஎம்மின் 42.22 சதவீதத்தை விட சற்று அதிகமாகும். மாநிலத்தில் ஆட்சியில் இல்லாதபோதும் 40-45 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்கு மாறியது மற்றும் பெரும் பழைய கட்சியின் வாக்கு சதவீதம் 1.79 சதவீதமாகக் குறைந்தது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Election Tripura
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment