/tamil-ie/media/media_files/uploads/2019/11/bjp.jpg)
பாஜக 2018 -19 நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு மேல் காசோலைகள், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் நன்கொடை பெற்றுள்ளதை தெரிவித்துள்ளது. இதில் டாடாவால் நிர்வகிக்கப்படும் தேர்தல் அறக்கட்டளை பாதித் தொகையை அளித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் அதன்படி மத்தியில் ஆளும் பாஜகவும் சமர்ப்பித்துள்ளது. இதில், பாஜக 2018 -19 ஆம் நிதி ஆண்டில், ரூ.700 கோடிக்கு மேல் காசோலைகள் மற்றும் ஆன்லைன் வழியாக நன்கொடை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. இதில் டாடாவால் நிர்வகிக்கப்படும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை பாதிக்கு மேலாக ரூ.356 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவின் பணக்கார அறக்கட்டளையான புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை ரூ.54.25 கோடி நன்கொடை வழங்கியது என்று பாஜக தேர்தல் ஆணையத்திற்கு அளித்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
பாரதி குழுமம், ஹீரோ மோரோகார்ப், ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமென்ட், டி.எல்.எஃப், ஜே.கே. டயர்ஸ் உள்ளிட்ட உயர்மட்ட கார்ப்பரேட் நிறுவனங்களால் புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை ஆதரிக்கப்படுகிறது.
பாஜக ரூ.20,000க்கு மேல் காசோலையாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ நன்கொடையாக பெறப்பட்ட தகவல்கள் சமர்ப்பித்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் நன்கொடை ரசீதுகள் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
பாஜக இந்த தொகையை தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து நன்கொடைகளாகப் பெற்றுள்ளது. தேர்தல் விதிமுறையின்படி, அரசியல் கட்சிகள் ஒரு நிதியாண்டில் அவர்கள் பெறும் அனைத்து நன்கொடைகளையும் வெளியிட வேண்டும். தற்போது, ​​அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கு குறைவாக தேர்தல் நன்கொடை ரசிதுகள் மூலம் நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us