scorecardresearch

பா.ஜ.க – வி.எச்.பி இடையே பதற்றம்: ஷாஜியா இல்மி குறிப்பிட்டது என்ன?

பாரதிய ஜனதா கட்சியில் நரேந்திர மோடியின் எழுச்சி, 2002 கலவரங்கள், வி.எச்.பி-க்கு எதிரான வழக்குகள், மற்றும் நீடித்த பகை ஆகியவை இரு சங்க பரிவார அமைப்புகளுக்கு இடையிலான உறவைக் குறிப்பிடுகின்றன.

பா.ஜ.க – வி.எச்.பி இடையே பதற்றம்: ஷாஜியா இல்மி குறிப்பிட்டது என்ன?

பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஜியா இல்மி, பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதில் இருந்தும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் இருந்தும் பிரதமர் நரேந்திர மோடியை ஒதுக்கி வைத்துவிட்டு, பா.ஜ.க-வுக்கும் வி.எச்.பி-க்கும் இடையே பதற்றம் இருப்பதாகக் குறிப்பிட்டுளார். மேலும், குஜராத்தில் இருந்து தொடங்கி, மோடியின் எழுச்சியிலிருந்து இரு சங்பரிவார் அமைப்புகளுக்கு இடையே உள்ள இறுக்கமான உறவைக் குறிப்பிட்டுள்ளார்.

வி.எச்.பி பதிலடி கொடுத்த நிலையில், இந்த விழாவில் பரிஷத் ஈடுபட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்டதாகக் கூறிய இல்மி, குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது இரு சங்பரிவார் அமைப்புகளுக்கு இடையே இருந்த பதற்றத்தைப் பற்றி பேசுவதாகவும் தெளிவுபடுத்தினார். “தற்போது நடக்கும் எதையும் நான் குறிப்பிடவில்லை.” என்று இல்மி கூறினர்.

இருப்பினும், அவருடைய கருத்துகள் தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் கருத்தை பிரதிபலிக்கிறாரா என்பதை பா.ஜ.க தெளிவுபடுத்த வேண்டும் என்று வி.எச்.பி வலியுறுத்தியுள்ளது.

இல்மி குறிப்பிட்ட அந்த பதற்றத்தின் பா.ஜ.க முகம் மோடி என்றால், வி.எச்.பி-யில் மூத்த தலைவர் பிரவின் தொகாடியாவாக இருந்தார். இருவரும் சேர்ந்து குஜராத்தில் கேசுபாய் படேல் அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர்கள் வீழ்ச்சியடையும் வரை ஒன்றாக வேலை செய்தனர்.

ராமஜென்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய வி.எச்.பி, அதுவரை குஜராத்தில் ஒரு ஏற்றம் சூழ்நிலையாக கருதியது. அங்கு சங்பரிவார் ஆளும் பா.ஜ.க-வுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. 1990-ல் குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து பாஜக தேசியத் தலைவர் எல்.கே. அத்வானி ராமஜென்மபூமி ரத யாத்திரையைத் தொடங்கினார்.

இதன் விளைவாக ஏற்பட்ட இந்துத்துவா அலை 1995-இல் குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வர உதவியது. காங்கிரஸின் கீழ் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த உயர்சாதி இந்துக்களான பட்டிதார் மற்றும் பிராமணர்கள் பா.ஜ.க-வில் திரண்டனர். குஜராத்தில் காங்கிரஸ் தனது கே.எச்.ஏ.எம் ஃபார்முலா அல்லது க்ஷத்ரிய, ஹரிஜன், ஆதிவாசி மற்றும் முஸ்லீம் வாக்குகளைத் திரட்டித்தான் பெரும்பாலும் தேர்தலில் வெற்றிபெற்றது.

வி.எச்.பி-யில் இருந்து கோர்தன் ஜடாபியா போன்ற அனல் பறக்கப் பேசும் தலைவர்கள், அதே போல் வி.எச்.பி-யின் பெண்கள் பிரிவான துர்கா வாஹினி, மாயா கோட்னானி மற்றும் பாவ்னா தேவ் போன்றவர்களின் நுழைவினாலும் பாஜக ஆதாயமடைந்தது. கேசுபாய் படேல் நிர்வாகத்தின் கீழ், வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் கட்சியினர் திரிசூலம் விநியோகம், தர்ம சன்சத்கள் மற்றும் ‘இந்து எதிர்ப்பு’ சின்னங்களுக்கு எதிராக தெருமுனைப் போராட்டங்களை ஏற்பாடு செய்ததால் தடையின்றிச் சென்றனர். கோக் மற்றும் பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அம்தாவத் நி குஃபா கேலரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்த இந்துத்துவா ஒருங்கிணைப்பின் மிக முக்கியமான முகங்களில் அகமதாபாத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணரும், தீவிர தலைவருமான பிரவின் தொகாடியா ஆவார். இவர் வி.எச்.பி-யின் எழுச்சிக்கு உதவினார். ராமர் கோயிலுக்கு நிதி திரட்டினார்.

இந்த நேரத்தில்தான் நரேந்திர மோடியும் பாஜக பொதுச் செயலாளராக குஜராத் திரும்பினார். 2001-இல் படேல் வெளியேறிய பிறகு, அவர் முதல்வரானபோது, ​​தொகாடியாவுடன் மோதல்கள் உருவானது.

2002 கலவரம் வந்த பிறகு

59 பேரைக் கொன்ற சபர்மதி ரயில் தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, பெரும்பாலும் அயோத்தியிலிருந்து திரும்பிய கரசேவகர்கள், வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் வி.எச்.பி-யின் ஜெய்தீப் படேல் மற்றும் பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி, முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி ஆகியோர் அடங்குவர். சில கலவர வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தொகாடியா மற்றும் மோடி இருவரையும் விசாரித்தபோதும், வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த பலர், பாஜக நிர்வாகத்தால் தாங்கள் கைவிடப்பட்டதாக உணர்ந்தனர்.

ஜெய்தீப் படேல் இப்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தாலும், நரோடா காம் வழக்கில் அவருக்கு எதிராகவும், கோட்னானி மற்றும் பஜ்ரங்கிக்கு எதிராகவும் விசாரணை நடந்து வரும் நிலையில், நரோடா பாட்டியா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கோட்னானி மீண்டும் பா.ஜ.க-வில் செயல்படுகிறார்.

2002 கலவரத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், மோடி தலைமையிலான பா.ஜ.க 182 இடங்களில் போட்டியிட்டு 127 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. தொகாடியா பா.ஜ.க-விற்கு ஆதரவாக பல கூட்டங்களில் பேசினார். அதே நேரத்தில் இந்துத்துவா அலையைப் பணமாக்க, கோத்ராவில் இருந்து வெற்றி பெற்ற பஜ்ரங் தள் தலைவர் ஹரேஷ் பட் போன்றவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. ஜடாஃபியாவும் வெற்றி பெற்றார். ஆனால், அவர் முக்கியமாக இரண்டாவது முறை அமைச்சர் பதவியைப் பெறவில்லை.

மோடியின் எழுச்சியில் வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புக்கள் செய்த பங்களிப்பிற்கு தொகாடியா குறைவான பதில் பலனை உணர்ந்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்குப் பிறகுதான் மோடி தலைமையிலான பா.ஜ.க வி.எச்.பி-யில் இருந்து விலகத் தொடங்கியது. கலவரத்தைத் தொடர்ந்து குஜராத்தின் தொழில்துறைக்கு உகந்த தோற்றம் வெற்றியடைந்ததால், மோடி தனது இமேஜை மாற்ற விரும்பினார். மேலும், வி.எச்.பி உடனான தொடர்பு உதவவில்லை. 2003-இல், அவர் வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டைத் தொடங்கினார்.

கலவர வழக்குகளை மீண்டும் விசாரிக்கவும், மறு விசாரணை செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, ​​மோடிக்கும் பா.ஜ.க-வுக்கும் சங்பரிவாருக்கும் இடையே உள்ள இடைவெளி இன்னும் அதிகமாகியது.

2007 ஆம் ஆண்டில், கேசுபாய் படேல் மற்றும் தொகாடியாவின் ஆதரவுடன் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஜடாபியா மகா குஜராத் ஜனதா கட்சியை (எம்.ஜி.பி) தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

2008 ஆம் ஆண்டில், அப்போதைய வி.எச்.பி-யின் சர்வதேசத் தலைவரான மறைந்த அசோக் சிங்கால், மாநிலத் தலைநகரில் பெரிய அளவில் சட்டவிரோத கோவில்கள் மற்றும் கோவில்களை இடித்ததைத் தொடர்ந்து காந்திநகருக்கு வந்தார். மேலும், கஜினியின் மஹ்மூத் காலத்தில்கூட இதுபோன்ற இடிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார்.

2011ல், கலவர வழக்குகளில் இனி தலையிட மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து, சிறுபான்மை சமூகங்களை கவரும் முயற்சியாக கருதப்படும் சத்பவ்னா உண்ணாவிரதத்தை மோடி தொடங்கினார். அப்போதைய வி.எச்.பி-யின் சர்வதேச செயல் தலைவரான தொகாடியா இதை விமர்சித்தார். அவர், ‘மோடி இந்துத்துவாவை திணிக்கிறார்’ என்று கூறினார்.

இருப்பினும், மோடியின் புகழ் தொடர்ந்து உயர்ந்து. அவரை மத்தியில் அதிகாரத்திற்குத் தள்ளியது. தொகாடியா மோசமான சரிவைக் கண்டார். 2018 ஜனவரியில், 1996ல் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து தனக்கும் பா.ஜ.க தலைவர்களுக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை குஜராத் அரசு வாபஸ் பெற்றபோது, ​​அப்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு தொகாடியா நன்றி தெரிவித்தார். மோடியை விமர்சனம் செய்வது போல தெரிந்தபோது, “நீங்கள் ஏற உதவும் ஏணியை உடைக்கக்கூடாது.” என்று கூறினார்.

2018 ஆம் ஆண்டில், அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு மோடி அகமதாபாத்தில் விருந்தளித்துக்கொண்டிருந்தபோது, ​​தொகாடியா காணாமல் போனார் – இது மோடியை சங்கடப்படுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டது – 10 மணி நேரம் கழித்து அவரை போலீஸ் என்கவுன்டரில் கொல்லும் திட்டமிட்டுள்ளதாகக் கூறின்மீண்டும் தோன்றினார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 2018-இல், வி.எச்.பி-யில் நடந்த முதல் தேர்தலில், தொகாடியாவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். மேலும், அவர் அந்தர் ராஷ்ட்ரிய இந்து பரிஷத்தை தொடங்குவதற்காக விலகினார். 2019-இல், ஹிந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற அரசியல் கட்சியை அறிவித்து, லோக்சபா தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவதாக கூறினார். ஆனால், அவர் போட்டியிடவே இல்லை.

இப்போது குஜராத்தில் கிட்டத்தட்ட ஆளுமை இல்லாத தொகாடியா வடகிழக்கு மற்றும் தெற்கில் தனது அமைப்புகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மற்றும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தல் போன்ற விருப்பமான இந்துத்துவா நிகழ்ச்சி நிரல்களுக்குப் பின்னால் மோடி அரசு தனது பலத்தை உபயோகித்து நிறைவேற்றியதால், வி.எச்.பி-யின் முக்கியத்துவம் குறைந்துள்ளது.

வி.எச்.பி தலைவர் ஒருவர் கூறியது போல், “நாங்கள் அந்தோலங்காரியாக இருந்து (எதிர்ப்பாளர்) நிர்மங்காரிக்கு (கட்டமைப்பாளர்) மாறியுள்ளோம், ஏனெனில், இது மீண்டும் கட்டமைக்க வேண்டிய நேரம்.” என்று கூறினார்.

மோடி ஆட்சியின் கீழ் தான் ஒதுக்கப்பட்ட விதத்தை தொகாடியா தனது வெறுப்பை மறைத்தாலும், மோடி, தனது முன்னாள் நண்பரைப் பற்றி பொதுவில் பேசியதில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp vhp tension shazia ilmi modi

Best of Express