மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது பாஜக இணைய தளம்…

இந்த ஹேக்கிங்கிற்கு இதுவரை எந்த ஹேக்கிங் நெட்வொர்க்கும் பொறுப்பேற்கவில்லை. அதில் பதியப்பட்ட தகவல்கள் எதுவும் யாராலும் அக்செஸ் செய்ய இயலவில்லை.

bjp website hacked : BJP site defaced by hackers, goes offline
bjp website hacked : BJP site defaced by hackers, goes offline

bjp website hacked : பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான bjp.org – இணைய தளம் மர்ம நபர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டது.

ஆஃப்லைன் செல்வதற்கு முன்பு, அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் இருவரும் சந்தித்த போது நிகழ்ந்த நிகழ்வின் வீடியோ பதிவும், கீழே ஒரு கார்டூன் வீடியோவின் பதிவும் அதில் போடப்பட்டிருந்தது.

இந்த ஹேக்கிங்கிற்கு இதுவரை எந்த ஹேக்கிங் நெட்வொர்க்கும் பொறுப்பேற்கவில்லை. அதில் பதியப்பட்ட தகவல்கள் எதுவும் யாராலும் அக்செஸ் செய்ய இயலவில்லை. இந்நிலையில் தற்போது அந்த இணைய தளம் முழுவதும் ஆஃப்லைனிற்கு சென்றுள்ளது.

bjp website hacked2

பாஜக தரப்பில் இருந்து இணையத்தை சரி செய்யும் வேலையில்  இறங்கியுள்ளனர். சிரமத்திற்கு மன்னிக்கவும், மிக விரைவில் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவோம் என்றும் பாப் அப் ஒன்றினை வெப்சைட்டின் அட்மின் வெளியிட்டிருக்கிறார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp website hacked bjp site defaced by hackers goes offline

Next Story
பாலகோட்டில் பலத்த சத்தத்துடன் அரங்கேறிய தாக்குதல்.. அன்றைய இரவு விடிந்தது எப்படி?பாலகோட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com