உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் கோவாவில் உள்ள பர்மாகுடி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தனி மெஜாரி பெற்று வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்மையில் வடகிழக்கு மாநிலங்கள் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றத்தையும் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து அமித் ஷா பேசுகையில், “அண்மையில் ராகுல் தனது யாத்திரையை நிறைவு செய்தார். காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடந்தது. கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் பகுதிகள் எங்களின் கோட்டை என்றது.
ஆனால் நான் பா.ஜ.க. தலைவராக இருந்த போது அங்கு பா.ஜ.க. வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் அந்த வெற்றியை தக்க வைத்துள்ளது.
அங்கு காங்கிரஸ் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திரிபுராவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்துள்ளோம். நாகாலாந்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேகாலயாவிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“