Advertisment

இடைத்தேர்தல்.. 4 இடங்களில் பாஜக வெற்றி.. பிராந்திய கட்சிகள் கடும் நெருக்கடி

Assembly Bypoll Results 2022 : ஹரியானாவின் ஆதம்பூர், பீகாரின் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி (கிழக்கு), தெலங்கானாவின் முனுகோட், உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும் ஒடிசாவின் தாம்நகர் ஆகிய ஏழு தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
BJP wins Dhamnagar assembly bypoll in Odisha

அந்தேரியில் (கிழக்கு) உள்ள வாக்கு எண்ணும் மையம்.

Assembly Bypoll Results 2022 : ஹரியானாவின் ஆதம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஷ்னோய் 16,606 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

அதேபோல் உத்தரப் பிரதேசத்தின் கோலா கோகரன்நாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

Advertisment

இதற்கிடையில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் தொகுதியையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது. இதற்கிடையில், பீகாரின் மொகாமா சட்டமன்ற தொகுதியை ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தக்க வைத்துக் கொண்டது.

ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் பாஜகவின் சூர்யபன்ஷி சுராஜ் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தார். தற்போது அவரும் வெற்றி பெற்று விட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

,

தொடர்ந்து, மும்பையின் அந்தேரி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சிவசேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் ருதுஜா லட்கே வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், டிஆர்எஸ் கட்சியின் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி தெலுங்கானாவின் முனுகோட் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

,

பிகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக 1700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது. பல இடங்களில் பிராந்திய கட்சிகள் பாஜகவுக்கு கடும் சவாலாக திகழ்ந்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Rjd Party Uddhav Thackeray
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment