லோக்சபா தேர்தலுக்கான 16 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஐந்தாவது பட்டியலை பாரதிய ஜனதா கட்சி (BJP) வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: BJP's 5th list out: Kangana Ranaut, Justice Abhijit Gangopadhyay among 111 candidates
புதிய முகங்களில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ஆகியோர் அடங்குவர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா ரணாவத் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கல்கத்தா நீதிபதி மேற்கு வங்கத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். எம்பி வருண் காந்தி தவிர மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே மற்றும் வி கே சிங் ஆகியோரின் பெயர்கள் பா.ஜ.க பட்டியலில் இடம்பெறவில்லை.
ஐந்தாவது பட்டியலில் ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, சிக்கிம், ஒடிசா, மிசோரம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 111 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சம்பல்பூரில் போட்டியிடுகிறார் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா 2019ல் கடுமையான போட்டியில் தோல்வியடைந்த பின்னர் பூரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சுல்தான்பூரில் மேனகா காந்தியை பா.ஜ.க களமிறக்கியுள்ளயது, அதே நேரத்தில் பிலிபிட் தொகுதியில் வருண் காந்திக்கு பதிலாக உத்தரபிரதேச மந்திரி ஜிதின் பிரசாதா நிறுத்தப்பட்டுள்ளார். சீதா சோரன் தும்காவிலிருந்து (ஜார்கண்ட்) போட்டியிடுகிறார்.
உத்தர கன்னடா தொகுதியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை கட்சி நீக்கியுள்ளது. பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில் மீரட் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
முழு பட்டியல் இங்கே:
https://www.scribd.com/document/716677902/PRESS-RELEASE-5th-List-of-BJP-Candidate-for-GE-to-the-Lok-Sabha-2024-on-24-03-2024-1#from_embed
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“