பிரதமர் நரேந்திர மோடி கேரள பயணத்தின் போது பல்வேறு கிறிஸ்தவ மதப்பிரிவுகளைச் சேர்ந்த எட்டு பிஷப்புகளை சந்தித்து பா.ஜ.க-வுக்கு கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவைக் கோரியதாக தெரிய வந்துள்ளது.
கேரளாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினரை அணுகும் பா.ஜ.க-வின் நிகழ்சியைத் தொடர்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த 8 பிஷப்புகளைச் சந்தித்து, மாநிலத்தில் காலூன்ற முயற்சிக்கும் பா.ஜ.க-வுக்கு கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவைக் கோரினார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீரோ-மலபார் திருச்சபையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சந்திப்பு மிகவும் சிறப்பாக நடந்ததாகவும், கேரள மக்கள் மோடி அரசாங்கத்தைப் பாராட்டுகிறார்கள். மத்திய அரசின் முன்முயற்சியின் கீழ் கேரளாவில் மேலும் வளர்ச்சியை எதிர்நோக்குகிறோம் என்று கூறினார்.
கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவ சமூகத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை மோடி எடுத்துக்காட்டியதாகவும், ஆனால், பிஷப்புகளுடனான பிரதமரின் சந்திப்பு கேரளாவில் கட்சி வாக்குகளைப் பெறுமா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியதாகவும் ஜேக்கபைட் சர்ச் பிஷப் ஜோசப் மார் கிரிகோரியஸ் கூறினார். “பிஷப்களின் கட்டளைப்படி மக்கள் வாக்களிப்பதில்லை. மக்கள் வாக்களிப்பதற்கு முன் ஒரு அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்கிறார்கள். மக்கள் அறிவாளிகள். இருப்பினும், சந்திப்பில் நாங்கள் பல பிரச்னைகளை எழுப்ப முடியும்” என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பில், விவசாயத் துறை நெருக்கடி, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள், கடலோர மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகள் ஆகியவைப் பற்றி பேசப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஷப்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “ரப்பர் விவசாயிகளின் பிரச்னை எழுப்பப்பட்டபோது, மோடி அதை அறிந்திருப்பதாகக் கூறினார். ஆனால், தலித் கிறிஸ்தவர்களின் பிரச்னைகள் பற்றியும், குறிப்பாக மீனவர்கள் எதிர்க்கும் நீலப் பொருளாதாரக் கொள்கையின் பின்னணியில் மீனவர்களின் துயரங்கள் குறித்து எதிர்வினையாற்றவில்லை. என்றும் ஒரு வட்டாரம் கூறியது.
இக்கூட்டத்தில் சீரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் கிளீமிஸ், லத்தீன் கத்தோலிக்க பேராயர் ஜோசப் காளத்திபரம்பில், மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர் பசிலியோஸ் மார் தாமஸ் மேத்யூஸ் III, கத்தோலிக்க பேராயர் மத்தேயு மூலக்காட், சால்டியன் சர்ச் தலைவர் மார் அவ்கின், மற்றும் ஞானா யாக்கோபையர் பேராயர் செவேரியஸ் குரியகோஸ் ஆகிய பிஷப்கள் கலந்துகொண்டனர்.
சீரோ-மலபார் திருச்சபையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கிறிஸ்தவ சமூகத்தின் தேவைகளையும், கேரள மக்களுக்கான தேவைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். விவசாயிகளின் துயரங்கள், மீனவர்கள் பிரச்சனைகள், தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் ஆகியவற்றை அவரிடம் முன் முன்வைத்தோம். கேரளாவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன செய்தேன் என்று பேசினார். மத பேதமின்றி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்று குறிப்பிட்டார். மத அடிப்படைவாதத்தால் வட இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரி பணி தடைபடுவது பற்றிய எங்கள் கவலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.” என்று கூறினார்.
நாட்டில் உள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். எதிர்காலத்தில் போப் பிரான்சிஸின் இந்திய வருகை குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு சாதகமான அணுகுமுறையை மோடி உறுதியளித்தார். எதிர்காலத்திலும் இதுபோன்ற சந்திப்புகளை அவர் விரும்புகிறார்” என்று கிரிகோரியஸ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.