Advertisment

நலத்திட்டங்களை குறிவைக்கும் பாஜக: சமுக நீதியை முன்னிறுத்தும் திமுக

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று அவர், துவாரகாவில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை துவக்கி வைத்தார். நேற்றைய தினத்தை பாஜக, காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் அரசியல் கொள்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பயன்படுத்திக்கொண்டன.

author-image
WebDesk
Sep 18, 2023 17:39 IST
சமுக நீதியை முன்னிறுத்தும் திமுக

சமுக நீதியை முன்னிறுத்தும் திமுக

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று அவர், துவாரகாவில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை துவக்கி வைத்தார். நேற்றைய தினத்தை பாஜக, காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் அரசியல் கொள்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பயன்படுத்திக்கொண்டன.

Advertisment

 திமுக மற்றும் மற்ற திராவிட கட்சிகள் பெரியாரின் பிறந்த நாளான நேற்று கொண்டாடின. தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில், 6 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தேர்தலில் வெற்றியடைந்தால் இதை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சி  பேரணியில் வாக்குறுதியை கொடுத்தது.

நேற்றைய தினத்தில் பிரதமர் மோடியின் 73வது  பிறந்த நாளில், பாஜக வளர்ச்சி மற்றும் நலத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் முக்கியதுவம் கொடுத்தது. டெல்லியில், துவாரகாவில் சர்வதேச அளவில் நிகழ்வுகளை நடத்தும் மையத்தை யஷோபூமியை  பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயில்  இந்த மையம் வரை பயணிக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 8.9 லட்சம் சதுர மிட்டரில் இது கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் நிகழ்வுகள், கண்காட்சிகள் நடைபெறும் அளவில் வசதியாக ரூ. 5,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் “ துவாரகாவில் உள்ள யஷோபூமி நவீன கட்டட கலையில் செய்யப்பட்டது. டெல்லி மெட்ரோ ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ், இத்துடன் தொடர்புபடுத்தும் என்பதால், சர்வதேச நிகழ்வுகள் இனி டெல்லியில் எளிதாக நடைபெறும்” என்று அவர் கூறினார்.

விஸ்வகர்மா ஜெயந்தியியை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் உள்ள சிறு கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகளை  வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டம் மூலம் ரூ. 13,000 முதல் ரூ. 15,000 கோடி வரை மத்திய அரசு வழங்க உள்ளது.  தமிழகத்தில் நேற்று பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில்  ´ அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!

 மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!. பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே!

 பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது பாஜகவுடன் திமுக எதிர்ப்பு போக்கில் உள்ளது. சமீபத்தில் சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையானது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil 

#India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment