ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்கினால் தமிழக சட்டமன்ற தேர்தலில் கனிசமான வாக்குகள் பிரியும் என்று கண்க்கிட்ட பாஜகவுக்கு, ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற திடீர் அறிவிப்பு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பின்னடைவை சரி செய்யும் வகையில், வரும் பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பொங்கல் பண்டிகை மாநிலம் தழுவிய பெரும் கொண்டாட்டாமாக இருக்கும் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்கு அஸ்திவாரம் அமைக்கும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார கால பொங்கல் பண்டிகையை – “நம்ம ஊரு பொங்கல்” என்ற பெயரில் கொண்டாட தயாராகியுள்ள பாஜக கட்சியினர், தமிழகத்தில் பாஜக ஒரு வட இந்திய கட்சி என்ற பிம்பத்தை தகர்த்தெரிய இத்தகைய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் முதல் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பரில், தமிழ் கடவுள் முருகனின் பெயரில், வேல்யாத்திரை நடத்தப்பட்டது.
பாஜக தமிழக தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தாலும் தடையை மீறி இந்த யாத்திரை வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து “ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஜக தலைவர் ஜே.பி நாடாவும் தேசிய பொதுச் செயலாளர்கள் சி டி ரவி, பி எல் சந்தோஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நமது தேசியத் தலைவர்களும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் நீண்டகால திட்டங்கள்
தமிழ் கலாச்சாரமும், விவசாயிகளை கொண்டாடும் ஒரு திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு பாஜகவின் ஒரு வார கால கொண்டாட்ட திட்டம், மே மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமாகவும் கணக்கிடப்படுகிறது. இதுவரை பெரும்பாலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வரும் தமிழகத்தில், வேற்றுகட்சி காலுண்ற நீண்டகால திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த கொண்டாட்டம் உள்ளது. மேலும் கடந்த 2017 பொங்கலின் போது தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களின் முடிவில்,பாஜக இருந்த்து குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ கூறுகையில்,
பாஜகவின் இந்த நடவடிக்கை திராவிடக் கட்சிகளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனென்றால், மக்கள் திருவிழாவாகக் கருதப்படும் பொங்கல் பண்டிகையை, இதுவரை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள எந்த கட்சியும் முயற்சிக்கவில்லை. பாஜக போன்ற ஒரு கட்சி பொங்கலைக் கொண்டாடுவது முக்கியம். இது வெறும் பண்டிகை அல்ல, மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றியது. “நாங்கள் அதை பெரிய அளவில் கொண்டாடுகிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் கொண்டாட்டங்களில் மூத்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களான எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் எல் முருகன், சி பி ராதாகிருஷ்ணன், குஷ்பூ மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook