/indian-express-tamil/media/media_files/EAdyQwdSrklUl8boeFfY.jpg)
மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல் அமைச்சராக உஜ்ஜைன் தெற்கு எம்எல்ஏ மோகன் யாதவ் பதவியேற்பார் என்று பாஜக திங்கள்கிழமை (டிச.11) அறிவித்துள்ளது.
4 முறை பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்குப் பதிலாக யாதவ் பதவியேற்கிறார். இவர் மூன்று முறை உஜ்ஜைனியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) பணியாற்றியுள்ளார்.
மேலும், சௌஹான் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக பதவி வகித்தார். இது குறித்து, கைலாஷ் விஜயவர்கியா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “இது புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை, புதிய வளர்ச்சி.. மோடிஜி உழைக்கும் புதிய இந்தியாவில், மத்தியப் பிரதேசம் ஒரு முன்மாதிரியாகத் திகழும். புதிய தலைமையின் கீழ் மாநிலம் அவரது கனவுகளை நிறைவேற்றும்” என்றார்.
யாதவ் மத்திய பிரதேசத்தில் சுற்றுலா வளர்ச்சிக்காக 2011-2012 மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியால் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : BJP’s Mohan Yadav to be new Madhya Pradesh CM
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.