தென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிடுகிறதா பாஜக?

தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை

2019 தேர்தலுக்கான பாஜக கூட்டணி : அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டு நிலவும் என்று அனைவரும் அறிவோம். நேற்று (26/08/2018) காங்கிரஸ் மூன்று முக்கிய குழுக்களை அறிவித்து அறிக்கை வெளியிட்டது.

தென்னிந்தியாவில் எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்?

இதைப்பற்றி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இது குறித்து பேசுகையில் தமிழ் நாட்டில் நிச்சயம் நாங்கள் கூட்டணியை அமைப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆந்திராவில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது பாஜக.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் அங்கு முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தெலுங்கானாவில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று யோசித்து வருகிறது பாஜக. ஆனால் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

தென்னிந்தியாவில் இருக்கும் தொகுதிகளும் பாஜகவின் கணக்கும்

தென்னிந்தியாவில் இருக்கும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 130 தொகுதிகள் இருக்கிறது. அதில் எப்படியும் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பாஜக.

தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பெரும்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டதால் எங்களால் மிக எளிதில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இயலும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தேர்தல் ஆணையம் பற்றிய செய்தியைப் படிக்க 

தமிழகத்தில் பாஜக கூட்டணி

தமிழகத்தில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கோபாலபுரத்திற்கு வருகை புரிந்தார் நரேந்திர மோடி. அதே போல் கருணாநிதியின் மறைவிற்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் விரைந்தனர்.

அதே போல் சமீபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழி நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக கட்சியும் சரி, எதிர்கட்சியான திமுகவும் பாஜகவிற்கு எதிரான நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மிகவும் முக்கியமான இடமாக பாஜக எடுத்துக் கொள்வதற்கு காரணம் இருக்கிறது. ஏன் என்றால் கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close