மத்திய கல்வி அமைச்சகத்தின் “ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்” (EBSB) முன்முயற்சியின் கீழ் சமீபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக, IIT (கோவா) இலிருந்து 45 மாணவர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ரெவால்சருக்கு (Rewalsar) செல்ல உள்ளனர்.
இவர்கள் மே 17 முதல் 23ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் செல்கின்றனர். அப்போது, நரேந்திர மோடி அரசின் கையெழுத்து திட்டங்களான அடல் சுரங்கப்பாதை, லர்ஜி அணை போன்றவற்றையும் பார்வையிட உள்ளனர்.
ஏற்கனவே மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் குஜராத், மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் வாரணாசி போன்ற பகுதிகளை வரலாற்று இணைப்புகளின் அடிப்படையில் இணைக்க ஒரு தொடர்ச்சியான முயற்சியை எடுத்துவருகிறது.
அந்த வகையில், யுவ சங்கமம் - பிப்ரவரியில் தொடங்கப்பட்ட ஒரு இளைஞர் பரிமாற்றத் திட்டமாகும். இதில் முதல்கட்டமாக 1200 பேர் பங்கேற்பார்கள்.
இதற்கு முன் சென்றிராத மாநிலங்களுடன் பரிச்சய உணர்வை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். IIT கோவா மாணவர்கள் ரெவால்சர் வருகையின்போது புத்தம் குறித்து அறிந்து கொள்வார்கள்.
புத்தம், சீக்கியம், இந்து மதங்களின் சங்கமமாக ரெவால்சர் காணப்படுகிறது. மாணவர்கள் தங்களின் ரெவால்சர் பயணத்துக்கு பின்னர் 35 மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்தும், 10 மாணவர்கள் லடாக்கில் இருந்தும் கோவா திரும்புகின்றனர்.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காக, மொழி கற்றல், கலாச்சாரம், மரபுகள், இசை, சுற்றுலா மற்றும் உணவு வகைகள் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் மாநிலங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்டோபர் 31, 2015 அன்று நடைபெற்ற ராஷ்டிரிய ஏக்தா திவாஸின் போது, "பல்வேறு பகுதி மக்களிடையே நீடித்த மற்றும் கட்டமைக்கப்பட்ட கலாச்சார தொடர்புகள்" என்ற யோசனை முதலில் மோடியால் முன்வைக்கப்பட்டது.
இந்த திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், மேற்கு வங்கம் விலகியது.
சில பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் வருகைகள் ஆரம்ப ஆண்டுகளில் நடத்தப்பட்டன, ஆனால் அது விரும்பிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.
இருப்பினும், மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற காசி-தமிழ் சங்கமம் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது
கடந்த மாதம், காசி மற்றும் ஆந்திரப் பிரதேசம்-தெலுங்கானா இடையேயான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் காசி தெலுங்கு சங்கமம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை கங்கை மற்றும் கோதாவரி நதிகளின் சங்கமம் என்று மோடி வர்ணித்தார். அரசியல் ரீதியாக, தென் மாநிலங்களில் பாஜகவின் அடித்தளத்தை ஆழப்படுத்தும் மோடியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் பார்க்கப்படுகின்றன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் கலாசார பாரம்பரியத்தை வெளிக்கொணரும்போது இந்தியா ஓர் நாகரீக நாடாக இருக்கும் என இந்து வலதுசாரிகள் நினைக்கின்றனர்.
இந்த நிலையில், கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதியின் தலைவரான கல்வியாளர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, "நமது வரலாற்றுப் புத்தகங்களில் என்ன இருந்திருக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, “பிரித்தாளும் சிந்தனை மற்றும் செயல்பாடு பற்றி மட்டுமே கற்பிக்கப்படுகிறோம், நமது உள்ளடக்கிய கலாச்சாரத்தைப் பற்றி அல்ல” என்றார்.
மேலும், வடக்கு-தெற்கு பிரிவினையைப் பயன்படுத்தி நாட்டை பலவீனப்படுத்தவும், ஒரு மாநிலத்திற்கு எதிராக மற்றொன்றைத் தூண்டவும் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“