அதிக், முக்தார் பாதுகாவலர்… அகிலேஷை குறிவைத்து பா.ஜ.க உ.பி-யில் வீடியோ பிரச்சாரம்!

சாலையோர மோசடிக்காரர்கள் போல பேசும் பா.ஜ.க. அரசியல் 'பண்பைப் படுகொலை செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது என்று ஷிவ்பால் பதிலடி கொடுத்துள்ளார்.

சாலையோர மோசடிக்காரர்கள் போல பேசும் பா.ஜ.க. அரசியல் 'பண்பைப் படுகொலை செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது என்று ஷிவ்பால் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
bjp video targeting akhilesh, atiq ahmed, BJP UP campaign, bjp up campaign video targets Akhilesh, Atiq ahmed shoot, Mukhtar ansari, Muzaffarnagar riots, political pulse, indian express

அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைக் குறிவைத்து பா.ஜ.க-வின் மாநில பிரிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2013-ம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்தில் குண்டர்கள் - அரசியல்வாதிகளான அதிக் அகமது மற்றும் முக்தார் அன்சாரி போன்றோரின் பாதுகாவலர் அகிலேஷ் யாதவ் என்று பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

Advertisment

“குண்டர்கள் அழைக்கிறார்கள், அகிலேஷ் வா” என்று குறிப்பிட்டு உ.பி. பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்த வீடியோ 4.24 நிமிடம் நேரம் கொண்டது. இதில், அகிலேஷ் மண்டை ஓடு தொப்பி அணிந்திருக்கிறார். சமீபத்தில் பிரயாக்ராஜில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. அதிக் அகமது மற்றும் தற்போது சிறையில் இருக்கும் முக்தார் அன்சாரியுடன் இருக்கும் பழைய புகைப்படங்களைக் காட்டுகிறது. “முசாபர்நகர் கலவரம் உங்களால்தான் நடந்தது… உங்களால்தான் முக்தாரும் அதிக்கும் வளர்ந்தார்கள். குற்றவாளிகளை அரசியல் தலைவர்களாக்கி, கௌரவையும் சச்சினையும் கொன்றீர்கள்… வாருங்கள், உ.பி.யை மீண்டும் கலவரத்தில் கொளுத்துங்கள்” பின்னணியில் குரல் ஒலிக்கிறது.

Advertisment
Advertisements

கடந்த 2013-ம் ஆண்டு அகிலேஷ் உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோது, ​​கவுரவ் மற்றும் சச்சின் கொல்லப்பட்டது முசாபர்நகரில் கலவரத்தை ஏற்படுத்தியது.

ஈவ் டீசிங் செய்பவர்களுக்கு அகிலேஷ் மரியாதை கொடுப்பதாக குற்றம் சாட்டிய வீடியோவில், பாலியல் வண்புணர்வு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் புகைப்படம் உள்ளது.

ஜெயபிரகாஷ் நாராயண் அல்லது ஜே.பி-யின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவரது தந்தை முலாயம் சிங் யாதவின் கனவை அகிலேஷ் சிதைத்துவிட்டதாக பா.ஜ.க வீடியோ மூலம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. “உ.பி.யை கொள்ளையடித்த அரசியல்வாதி நீங்கள்… ஜே.பி-யின் கனவை சிதைத்த மகன் நீங்கள்… ” என்று அந்த வீடியோபாடல் கூறுகிறது.

அகிலேஷை போலி சோசலிச முகம் என்று கூறும் பா.ஜ.க-வின் பிரச்சாரப் பாடல், சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ராம பக்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்படும் என்று மக்களை எச்சரிக்கிறது.

பா.ஜ.க-வின் வீடியோவுக்கு எதிர்வினையாற்றிய சமாஜ்வாடி கட்சித் தலைவரும் அகிலேஷின் உறவினருமான ஷிவ்பால் யாதவ், பா.ஜ.க-வின் மொழி இப்போது “சாலையோர மோசடிக்காரர்களின்” மொழியாக மாறிவிட்டது, அரசியல் கட்சி “பண்பைப் படுகொலை செய்யும் நிறுவனமாக” மாறிவிட்டது என்று கூறினார்.

ஜனநாயகம், சமத்துவம், ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகள் சமாஜ்வாடி கட்சியில் ஆழமாக வேரூன்றி உள்ளன. எத்தனை அடக்குமுறைகள், சதிகள் செய்தாலும் நாங்கள் எழுந்து நிற்போம். மாநிலத்தில் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டுவர மக்கள்தான் அகிலேஷை எதிர்நோக்குகிறார்கள்” என்று ஷிவ்பால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

சஹாரன்பூரில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்குவதைக் காட்டும் மற்றொரு வீடியோவையும் பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: