நடிகரும் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) தலைவருமான கமல்ஹாசன் சனிக்கிழமை (டிச.24) டெல்லியில் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார்.
செங்கோட்டையில் பேசிய கமல்ஹாசன், “ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்டனர். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர்.
நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன், சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினேன். அனைத்து கட்சி பாகுபாடுகளை நீக்கி இங்கே வந்தேன்” என்றார்.
முன்னதாக, கமவ்ஹாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வீடியோ செய்தியில், “இந்த நடைபயணம் தேசத்துக்கானது. அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி இதில் கலந்து கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் கமல்ஹாசன் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இல்லாமல், சக குடிமகனாக பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியதாக கூறினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைவதற்கான கமல்ஹாசனின் முடிவு, காங்கிரஸை முக்கிய அங்கமாகக் கொண்ட தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு விரைவில் புதிய கூட்டணி அமையும் என்பதைக் குறிக்கிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஒப்படைப்பதன் மூலம் யாத்திரை தொடங்கியது.
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்), தேர்தலில் "தனித்து போட்டியிடுவோம்” எனக் கூறிவந்தது.
ஆனால் கமல்ஹாசன் தற்போது தெளிவாக காங்கிரஸை நோக்கி செல்கிறார்.
இதற்கிடையில், கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் தேசிய தலைநகரில் நடந்த அணிவகுப்பில் ராகுல் காந்தியுடன் சனிக்கிழமையன்று பாரத் ஜோடோ யாத்திரையில் காந்தி குடும்பத்தினரும் ஒன்றாக நடந்தனர்.
டெல்லியில் உள்ள ஆசிரம சௌக்கில் காலை இடைவேளைக்காக யாத்திரை நிறுத்தப்படும் வரை சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றனர். அந்த வகையில், முழு குடும்பமும் ஒன்றாக பாரத் ஜோடோ யாத்ராவில் நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/