டெல்லியில் தந்தையை கொன்று உடலை 10 துண்டுகளாக வெட்டிய நிலையில், மனைவியையும், மகனையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக டெல்லி பாண்டவ் நகரில் உள்ள மைதானத்தின் அருகில் போலீசார் தலை மற்றும் சில உடல் பாகங்களை கண்டெடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், தந்தையை கொன்றதாக மகன், தாயை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் ஷ்ரத்தா வால்கர் படுகொலையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு டிசிபி அதித் கோயல் இன்று (நவ.28) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஜூன் 5ஆம் தேதி கிழக்கு மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அடுத்த மூன்று நாள்களில், இரண்டு கால்கள், இரண்டு தொடைகள், ஒரு மண்டை ஓடு மற்றும் ஒரு முன்கை மீட்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் உடலை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு கொடூரமான கொலையாகத் தோன்றியது. காட்சிகளை ஆய்வு செய்து, வீடு வீடாகச் சென்று சரிபார்த்த பிறகு, சடலம் அஞ்சன் தாஸ் என போலீஸார் அடையாளம் கண்டனர்.
இது முக்கிய ஆதாரமாக சிசிடிவி காட்சி ஒன்று சிக்கியது. அதில், சம்பவத்தின் குற்றம் சாட்டப்பட்டவர் உடல் உறுப்புகள் அடங்கிய பையுடன் காலி மைதானத்தை நோக்கி நடந்து செல்வதைக் காட்டியது.
மேலும், “இறந்தவர் கடந்த ஐந்து-ஆறு மாதங்களாகக் காணவில்லை என்பதும், குடும்ப உறுப்பினர்களால் காணாமல் போன புகார் எதுவும் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் ஆகியோர் சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டனர். விசாரணையில் அவரது கொலையை அவர்கள் ஒப்புக்கொண்டனர்” என்றார்.
இந்தக் கொலை நடந்த சம்பவத்தையும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையுண்ட அஞ்சனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் அவரது உடலை 10 துண்டுகளாக வெட்டியுள்ளனர்.
மேலும் அந்த உடலை வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனர். தற்போதுவரை போலீசார் வசம் உடலின் 6 பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள உடல் பாகங்களை போலீசார் தேடிவருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் ஷ்ரத்தா வால்கர் என்ற இளம்பெண் அல்ஃதாப் என்ற இளைஞரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
அவரை உடலை அல்ஃதாப் 35 பாகங்களாக வெட்டி பல்வேறு டெல்லியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
தற்போது போலீசார் கண்காணிப்பில் அல்ஃதாப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil