பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு (சனிக்கிழமை) துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.
துபாய்க்கு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவருடன் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் இருந்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு இந்த செய்தியை போனி கபூரின் சகோதரர், சஞ்சய் கபூர் உறுதி செய்தார்.
ஸ்ரீ அம்மா யாங்கர் எனும் இயற்பெயருடன் பிறந்த ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதன்பிறகு பாலிவுட்டில் ஜூலி (1975) என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். கதாநாயகியாக தமிழிலில் நடித்த முதல் திரைப்படம் மூன்று முடிச்சு (1976). அப்போது அவருக்கு வயது 13. ஸ்ரீதேவிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஜூசாய் என்ற திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அதன்பின், சினிமாவிலிருந்து விலகினார். அதன்பின், 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்லீஷ்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். கடைசியாக 2017-ஆம் ஆண்டு மாம் எனும் திரைப்படத்தில் நடித்தார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இத்தம்பதிக்கு ஜானவி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். போனி கபூரின் சகோதரர் அனில் கபூருடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் பெரும் புகழை பெற்றன.