/indian-express-tamil/media/media_files/2h6ytRqbCMP7msbJEaG5.jpg)
சாருபாலா ஹாக்கிப், முன்னாள் சைகுல் எம்.எல்.ஏ யம்தோங் ஹாக்கிப்பின் மனைவி. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்/X/ @virbhadrayumnam)
சைகுல் முன்னாள் எம்.எல்.ஏ யம்தோங் ஹாக்கிப்பின் மனைவி சாருபாலா ஹாக்கிப், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் இறந்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Bomb explosion at home kills Kuki ex-MLA’s wife in violence-hit Manipur
59 வயதான சாருபாலா ஹொக்கிப், மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் குக்கி-ஜோமி ஆதிக்கம் செலுத்தும் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எகோ முலத்தில் வசித்து வந்தார். 64 வயதான யம்தோங் ஹாக்கிப்இரண்டு முறை சாய்குல் தொகுதியில் வெற்றி பெற்றார். 2012 மற்றும் 2017 இல், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.,வுக்கு மாறினார்.
காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்ததாகக் கூறினார், ஆனால் சனிக்கிழமை அதிகாலையில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு மத்தியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.இ.டி (IED) வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
“இறந்தவர் கழிவுப் பொருட்களை எரித்தபோது, அது வெடித்தது. மற்ற அனைவரும் நலம். வேறு உயிரிழப்புகளோ, காயங்களோ இல்லை,'' என்று காவல் அதிகாரி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
“முன்னாள் எம்.எல்.ஏ., தனது மாமாவின் பேரன் ஒருவருக்கு அருகிலுள்ள சில நிலத்தை வாங்கியதால் தகராறு ஏற்பட்டது. இதுவும் அதனுடன் தொடர்புடையது என சந்தேகிக்கிறோம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்,'' என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.