Advertisment

விமான பயணமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க ; அதிக பணத்தை சேமிங்க...

Flight ticket at lower price : பயணத்தை ஞாயிற்றுக்கிழமை துவங்குவதை காட்டிலும், வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துவக்கினால், விமான பயண கட்டணத்தை 10 சதவீதம் வரை சேமிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
airline tickets,விமான பயணம் , flight, plane, ticket booking

airline tickets, airlines, flight, plane, ticket booking, Ticket Prices, travel, Travel tickets, traveling, vacation, Vacation tickets, விமான பயணம், டிக்கெட், சேமிப்பு

விமான பயணத்திற்கு டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு முன் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் 25 சதவீதம் வரை பணத்தை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏர்லைன் ரிப்போர்ட்டிங் கார்ப்பரேசன் மற்றும் எக்ஸ்பீடியா நிறுவனங்கள் இணைந்து விமான பயண டிக்கெட்டை குறைந்த விலையில் எடுத்தல், எந்த நேரத்தில் எடுத்தால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள்

பயணத்திற்கு மூன்று வார காலத்திற்கு முன்னரே, டிக்கெட்டை புக் செய்துவிட வேண்டும்

விமான டிக்கெட்களை, வார இறுதிநாட்களிலேயே புக் செய்ய வேண்டும்

தங்குவதற்கு ஹோட்டல்களை, வெள்ளிக்கிழமை இரவு புக் செய்ய வேண்டும்

விமான பயணம், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை துவங்குவதாக இருக்கவேண்டும்

வார நாட்களில் சுற்றுலாவோ அல்லது குறுகிய கால சுற்றுலாவோ, அதில் சனிக்கிழமை இரவு நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பயணத்தை ஞாயிற்றுக்கிழமை துவங்குவதை காட்டிலும், வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துவக்கினால், விமான பயண கட்டணத்தை 10 சதவீதம் வரை சேமிக்கலாம்.

வார இறுதிநாட்களில் விமான டிக்கெட்களை புக் செய்வதன் மூலம் 20 சதவீதம் வரை பணத்தை சேமிக்கலாம். தொலைதூர நாடுகளுக்கான பயண டிக்கெட்களை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புக்கிங் செய்வதன் மூலமும், 20 சதவீதம் வரை பணத்தை சேமிக்கலாம்.

வார நாட்களில் சுற்றுலா மேற்கொள்வோர், சனிக்கிழமை இரவையும் சேர்த்துக்கொண்டு ரிட்டர்ன் டிக்கெட் புக்கிங் செய்தால் தாராளமாக 25 சதவீதம் வரை பணத்தை சேமிக்கலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Qatar Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment